பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

டால்ஸ்டாய் கதைகள்

என்றாலும் அக்ஸனோவ் நடந்த விஷயத்தை விரிவாக எடுத்துக் கூறினான். “நான் என்ன திருடனா, கொள்ளைக்காரனா? என்னை ஏன் இப்படிக் குறுக்கு விசாரணை செய்கிறீர்கள்? எனது சொந்தத் தொழில் காரணமாக நான் பிரயாணம் செய்கிறேன். என்னைக் கேள்வி கேட்க வேண்டிய அவசியமே கிடையாது” என்றும் சொன்னான்.

உடனே அந்த அதிகாரி இரண்டு வீரர்களையும் அருகே அழைத்தார். நான் இந்த வட்டாரத்தின் போலீஸ் அதிகாரி. நேற்று இரவு உன் கூடத் தங்கியிருந்த வியாபாரி கழுத்தறுபட்டுக் கிடந்தான். அதனால் தான் நான் உன்னை விசாரிக்கிறேன். இப்போது உன் சாமான்களை சோதனை போட வேண்டும்” என்று அவர் விளக்கினார்.

அவ் வீரர்களும் போலீஸ் அதிகாரியும் அக்ஸனோவின் சாமான்களை எல்லாம் பரிசோதித்தார்கள். திடீரென்று ஒரு பையிலிருந்து கத்தி ஒன்றைக் கண்டெடுத்த அதிகாரி “இது யார் கத்தி?” என்று கூவினார்.

அக்ஸனோவ் பார்த்தான். ரத்தம் தோய்ந்த கத்தியைக் கண்டதும் அவன் திடுக்கிட்டான்.

“இந்தக் கத்தியில் ரத்தம் எப்படி வந்தது?”

அக்ஸனோவ் பதில் சொல்ல முயற்சித்தான். அவனுக்கு சரியாகப் பேச வரவில்லை. “நான் வந்து.... எனக்குத் தெரியாது....என்னுடைய தில்லை” என்று அவன் குளறினான்.

“வியாபாரி கழுத்து அறுபட்டு படுக்கையில் கிடந்தது இன்று காலையில் தெரிந்தது. நீ ஒருவன்-