பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றமும் தண்டனையும்

143

காலத்துக்கு முன்னாலேயே நான் இங்கே வந்திருக்க வேண்டும். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்பொழுதோ, ஒன்றுமில்லாததற்காக என்னை இங்கே அனுப்பி விட்டார்கள். ....அஹ, நான் இப்ப சொல்வது பொய்தான். முன்னாலேகூட நான் சைபீரியாவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் ரொம்பநாள் தங்கியிருக்கவில்லை.”

“நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று ஒருவன் கேட்டான்.

“விளாடிமிரிலிருந்து, எனது குடும்பத்தாருக்கு அந்த ஊர்தான். மகார் என்பது என் பெயர். செமினிச் என்றும் என்னைக் கூப்பிடுவார்கள்” என்றான் அவன்.

அக்ஸனோவ் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தான். “செமினிச், விளாடிமிர் நகரில் உள்ள அக்ஸனோவ் குடும்பத்தாரைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா?” என்று கேட்டான்.

“தெரியாமல் என்ன! ரொம்ப நன்றாகத் தெரியும். அக்ஸனோவ் குடும்பத்தினர் நல்ல பணத்தோடு வாழ்கிறார்கள். அவர்களுடைய தகப்பனார்தான் சைபீரியாவில் வசிக்கிறார். அவரும் நம்மைப்போல் பாபம் செய்தவர் போலிருக்கிறது! அது... சரி,.. தாத்தா, நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய்?” என்றான் மற்றவன்.

தனது துரதிர்ஷ்டம் பற்றிப் பேச அக்ஸனோவுக்கு இஷ்டமில்லை. அவன் வெறுமனே பெருமூச்செறிந்தான் "எனது பாபங்களுக்காக நான் இருபத்தாறு வருடகாலம், சிறையில் கிடக்கிறேன்” என்றான்.