பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

டால்ஸ்டாய் கதைகள்



“என்ன பாபம்?” என்று மகார் செமினிச் கேட்டான்.

ஆனால் அக்ஸனோவிச், “ஊம், ஊம்......எனக்கு ஏற்ற தண்டனையாகத்தான் இருக்கும்” என்று மட்டுமே சொன்னான். அவன் அதற்குமேல் எதுவும் பேசியிருக்க மாட்டான். ஆனால் அவனுடைய சகாக்கள் விஷயத்தை எடுத்துச் சொன்னார்கள். எவனோ ஒருவன் யாரோ ஒரு வியாபாரியைக் கொலை செய்துவிட்டு கத்தியை அக்ஸனோவின் சரக்குகளுக்கிடையே பதுக்கி வைத்துவிடவே, அவன் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டு சைபீரியா வந்து சேர்ந்த விவரத்தை அறிவித்தார்கள்.

இதைக் கேள்வியுற்றதும் மகார் செமினிச் அக்ஸனோவைக் கூர்ந்து நோக்கினான். தனது முழங்கால் மீது ஓங்கித் தட்டிக்கொண்டு அவன் உற்சாகமாகக் கத்தினான். “அட, இது ஆச்சர்யம்தான். ஆனால், தாத்தா, நீ எவ்வளவு முதியவனாக வளர்ந்துவிட்டாய்!” என்றான்.

அவனுக்கு ஏன் அவ்வளவு ஆச்சர்யம் ஏற்பட்டது என்றும், அதற்குமுன் அக்ஸனோவை அவன் எங்கே பார்த்திருக்கிறான் என்றும் மற்றவர்கள் அவனைக் கேட்டார்கள். ஆனால் மகார் சரியாகப் பதில் சொல்லவில்லை. “நாங்கள் இங்கே சந்திக்க நேர்ந்தது ஆச்சர்யமே” என்றுதான் சொன்னான்.

இவ் வார்த்தைகள் அக்ஸனோவை சிந்திக்கத்தூண்டின. அந்த வியாபாரியைக் கொலை செய்தது யார் என்கிற விவரம் இவனுக்குத் தெரிந்திருக்குமோ என்று நினைத்தான் அவன். ஆகவே, “செமினிச்,