பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றமும் தண்டனையும்

145

ஒருவேளை நீ அந்தச் சம்பவம்பற்றி முன்பே கேள்விப் பட்டிருந்தாயோ? அல்லது நீ என்னை இதற்கு முந்தி பார்த்தது உண்டோ?” என்று கேட்டான்.

“கேள்விப்படாமல் இருக்க முடியுமா என்ன! உலகம் பூராவும், வதந்திகள் பறந்து திரிகின்றன. ஆனால் இது ரொம்ப காலத்துக்கு முந்திய சங்கதி. நான் என்ன கேள்விப்பட்டேன் என்பதே எனக்கு மறந்து போய்விட்டது.”

“அந்த வியாபாரியைக் கொன்றவன் யார் என்பதை நீ கேள்விப்பட்டது உண்டோ?” என்று வினவினான் அக்ஸனோவ்.

மகார் செமினிச் சிரித்துவிட்டுச் சொன்னான்; எவனுடைய பையில் கத்தி கண்டெடுக்கப்பட்டதோ அவனேதான் கொலை செய்திருக்க வேண்டும். வேறு எவனாவது அந்தக் கத்தியை அங்கே பதுக்கி வைத்திருக்கக் கூடுமே என்றால்—‘அகப்படாமல் இருக்கிற வரையில் அவன் திருடன் இல்லை’ என்பது வசனம். உன்னுடைய பைக்குள், அது உன் தலைக்குக் கீழே இருந்தபொழுது, வேறொருவன் கத்தியை எப்படித் திணித்திருக்க முடியும்? அப்படிச் செய்யும் பொழுது உன் தூக்கம் கலைந்து போயிருக்காதா?”

இந்தப் பேச்சைக் கேட்டதுமே, வியாபாரியைக் கொன்ற ஆள் இவன்தான் என்ற உறுதி அக்ஸனோவுக்கு ஏற்பட்டது. அவன் எழுந்து அங்கிருந்து போய்விட்டான்.

அன்று இரவு முழுவதும் அக்ஸனோவ் தூங்கவே இல்லை. கடுமையான துயரம் அனுபவித்துக் கிடந்தான் அவன். பலரகமான நிழல்களும் அவனது மன-

64—11