பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

டால்ஸ்டாய் கதைகள்

ரஸ்தாவில் கொட்டி அப்புறப்படுத்தி விட்டதாகவும் மகார் சொன்னான்.

“நீ சும்மா வாயை மூடிக் கொண்டிரு, கிழவா. நீயும் வெளியேறி விடலாம். நீ உளறி விட்டாயானால், என் தோலை உரித்து உயிரை எடுத்து விடுவார்கள். ஆனால் அதற்கு முந்தி நான் உன்னை ஒழித்துக்கட்டிவிடுவேன்” என்று அவன் எச்சரித்தான்.

தனது பகைவனைப் பார்க்கப் பார்க்க அக்ஸனோவுக்குக் கோபம் பொங்கியது. அதனால் அவன் தேகம் பதறியது. அவன் தனது கையை இழுத்துக் கொண்டான். “தப்பி ஓடவேணும் என்கிற ஆசை எனக்கு இல்லை. நீ என்னைக் கொல்லவேண்டும் என்கிற தேவையுமில்லை. ரொம்ப காலத்துக்கு முந்தியே நீ என்னைக் கொன்றுவிட்டாய். உன்னைக் காட்டிக் கொடுக்கிற விஷயத்தில்—நான் உள்ளதைச் சொல்லி விடலாம்; சொல்லாமலுமிருக்கலாம். அது கடவுள் திருவுள்ளப்படி நடக்கும்” என்று சொல்லிவிட்டான்.

மறுநாள், குற்றவாளிகளை வேலைக்கு இட்டுச் சென்றபோது, கைதிகளில் எவனோ ஒருவன் பூட்ஸில் மண்ணை எடுத்து வந்து வெளியே கொட்டுவதாகக் காவல் வீரர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். சிறை முழுவதும் சோதனை போடப்பட்டதில், கள்ள வழி அம்பலமாகி விட்டது. அவ் விஷயம் அறிந்த கவர்னர் வந்தார். அப்படி வழி தோண்டியவன் யார் என்று கண்டு பிடிப்பதற்காக அவர் எல்லாக் கைதிகளையும் விசாரித்தார். தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று எல்லோரும் சாதித்தார்கள். தெரிந்து வைத்திருந்த-