பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றமும் தண்டனையும்

149

வர்கள் மகார் செமினிச்சைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. அவ்வாறு செய்தால், கசைஅடி கொடுத்து அவனைச் சாகடித்து விடுவார்கள் என்பதை அனைவரும் அறிவர். கடைசியாக, கவர்னர் அக்ஸனோவ் பக்கம் திரும்பினார். அவன் நீதி தவறாத மனிதன் என்பது அவருக்குத் தெரியும். ஆகவே, அவர் கேட்டார் “உண்மையே பேசும் முதியவன் நீ. கடவுளுக்குப் பொதுவாகச் சொல்லு, இப்படிக் குழி பறித்தவன் எவன்?” என்று.

மகார் செமினிச், தனக்கு எதுவுமே சம்பந்தம் இல்லாதது போல, கவர்னரையே பார்த்தபடி நின்றான். அவன் அக்ஸனோவ் மீது சிறு பார்வை கூடச் செலுத்தினானில்லை.

அக்ஸனோவின் உதடுகளும் கரங்களும் துடித்தன. வெகுநேரம் வரை அவனால் ஒரு வார்த்தை கூடப் பேசமுடியவில்லை. “என் வாழ்க்கையைப் பாழ்படுத்தியவனை நான் ஏன் மூடி மறைக்கவேண்டும்? நான் அனுபவித்த கொடுமைகளுக்கு ஈடாக அவன் துயரப்பட வேண்டியதுதான். ஆனால், நான் சொல்லி விட்டால், இவர்கள் அவனை சவுக்கால் அடித்துக் கொன்றுவிடுவார்களே. நான் அவனைச் சந்தேகிப்பது தவறாகவும் இருந்து விடலாம். பார்க்கப் போனால் இதனால் இனி எனக்கு என்ன நன்மை வந்துவிடப் போகிறது?” என்றெல்லாம் யோசித்தான் அவன்.

“உம்... உண்மையைச் சொல்லு, கிழவா.. சுவருக்குக் கீழே வழி தோண்டியது யார்?” என்று கவர்னர் மறுபடியும் கேட்டார்.

அக்ஸனோவ் மகார் செமினிச்சைப் பார்த்தான். “என்னால் சொல்ல முடியாது, எஜமான். நான்