பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

17

பரபரப்பு அவளிடமும் தொத்திக் கொண்டது. அதனால் அவள் வேகமாக வேலை செய்தாள். அடுப்புப் பரண்மீது காய்ந்து கொண்டிருந்த நைந்து போன துணி அங்கியை எடுத்து, ‘அரக்கப் பறக்க’ உதறி, மாற்றி, கையினால் தேய்த்துப் பதப்படுத்தினாள்.

‘இனி உனக்கு நல்ல வாய்ப்புதான். உன் புருஷனோடு நீ சந்தோஷமாகப் பொழுது போக்கலாம்’ என்று நிகிட்டா சொன்னான். அவன் யாருடன் தனித்து நிற்க நேரிட்டாலும் சரிதான்; அன்பு கனிந்த உள்ளத்தோடு ஏதாவது இனிய வார்த்தை சொல்வது அவனுடைய வழக்கம்.

தேய்ந்து குறுகிய இடுப்புப் பட்டையைச் சுற்றி இழுத்து, சுருங்கிய வயிறு மேலும் ஒட்டிப் போகும்படி மூச்சை உள்வாங்கி, தோல்சட்டை உடம்போடு இறுகிப்படியும் வண்ணம் அழுத்திக் கட்டிக் கொண்டான் அவன். ‘இப்ப சரியாகி விட்டது’ என்றான்.

இப்படி அவன் சமையல்காரியிடம் பேசவில்லை. நுனிகளை இழுத்துச் சேர்த்து இடுப்பில் சொருகிக் கொண்டே அவன் அந்தப் பட்டையைப் பார்த்துத் தான் சொன்னான். ‘இனிமேல் நீ அவிழ்ந்து விழமாட்டாய்’ என்றும் சொன்னான்.

அப்புறம், கைகள் தாராளமாக இயங்குவதற்கு வசதியாக அவன் தோள்களை மேலும் கீழுமாக உயர்த்தியும் இறக்கியும், முதுகை வளைத்து நெளித்தும் மேல் சட்டையை மாட்டிக் கொண்டான். புஜங்களில் உறுத்தாதபடி கவனித்து, கைகளின் கீழ்ப்பகுதியில் குத்திக் குத்திச் சரிப்படுத்தினான். தோலினால் மூடிப்பொதிந்த கையுறைகளை எடுத்துக் கொண்டதும்

64—3