பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

33

தது. வேறொரு வீட்டருகே, தனதுமேல் சட்டையை இழுத்து தலையை மூடிக்கொண்டு எங்கிருந்தோ ஓடி வந்து மாது ஒருத்தி ஒரு குடிசையின் வாசலினுள் துழைந்தாள். உள்ளே செல்வதற்கு முன்னதாக அவள் வாசல்படியில் நின்று, தெருவில் செல்லும் வண்டியைக் கவனித்தாள். ஊருக்கு மத்தியில் பெண்கள் பாடுகிற குரல் காற்றில் மிதந்து வந்தது.

இந்த ஊரில் காற்றும் பனியும் குறைவு என்றே தோன்றியது. உறைபனியும் கடுமையாக இல்லை.

‘அட, இது கிரிஷ்கினோ அல்லவா!’ என்றான் வாஸிலி.

‘அதே தான்’ என்று நிகிட்டா ஆமோதித்தான்.

அந்த ஊர் கிரிஷ்கினோதான். அப்படியானால், அவர்கள் இடது பக்கத்தில் வெகுவாக விலகிப்போய் ஆறுமைல் தூரம் பிரயாணம் செய்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அவர்கள் போகவேண்டிய திசையிலே பிரயாணம் செய்யவில்லை தான். ஆனாலும் முடிவாக அடையவேண்டிய இடத்தை நோக்கியே சென்றார்கள் என்பதும் விளங்கியது. கிரிஷ்கினோவிலிருந்து கோர்யாச்கினுக்கு இன்னும் நான்கு மைல் தூரம் இருந்தது.

ஊர் நடுவே அவர்கள் நெட்டையான மனிதன் ஒருவன்மேல் மோதத் தெரிந்தார்கள். அவன் பாதையின் மத்தியில் நடந்து வந்தான். குதிரையை நிறுத்தியபடி ‘நீங்கள் யார்?’ என்று கூப்பாடு போட்டான் அவன். வாஸிலி ஆன்ட்ரீவிச்சை இனம் கண்டு கொண்டதும் அவன் குதிரையின் பக்கமாகவே நடந்து, வண்டியை அணுகி, வண்டி ஓட்டி உட்காருகிற பீடத்தின் மீது ஏறி அமர்ந்து விட்டான்.

64—4