பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

டால்ஸ்டாய் கதைகள்

பனியும் நின்று விட்டது. இவ்விதம் அவன் நினைத்தான்.

இங்கும் அங்குமாக விழுந்து கிடந்த புதிய கழிவுகளினால் கறுப்பாகத் தோன்றிய தெரு வழியாக, தடம்பட்ட பாதையோடு, வண்டி சென்றது. கொடியில் தொங்கி ஆடிய உடைகள் காணப்பட்ட முற்றத்தைத் தாண்டியது அது. அவ் வுடுப்புகளில் வெள்ளைச்சட்டை கட்டு அவிழ்த்துக் கொண்டு ஒற்றைக் கையினால் தொங்கிக் கிடந்தது. வில்லோமரங்கள் சோக கீதம் இசைத்து நின்ற இடத்துக்கு மறுபடியும் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். மீண்டும் வயல்கள் மீது போனார்கள். புயல், நின்றுவிடுவதற்கு மாறாக, அதிக வலுப் பெற்று வீசியதாகத்தான் தோன்றியது. ஓடும் பனியினால் ரோடு முற்றிலும் மூடி மறைக்கப்பட்டுவிட்டது. அங்கங்கே காணப்பட்ட முளைக்குச்சிகள் தான் அவர்கள் வழிதவறிச் செல்லவில்லை என்பதைக் காட்டி நின்றன. ஆனால் போகப்போக முளைகளைக் கண்டுபிடிப்பது கூட லேசான வேலையாகத் தென்படவில்லை. காரணம், அவர்கள் முகத்திலே காற்று தாக்கியது தான்.

வாஸிலி ஆன்ட்ரீவிச் கண்களைக் குறுக்கிக் கொண்டு, தலையைக் கீழே சாய்த்து, வழி ஓரத்து அடையாளங்களைத் தேடிக்கொண்டிருந்தான். ஆயினும் அவன் முக்கியமாக அந்தக் குதிரையின் மதிநுட்பத்தையே நம்பியிருந்தான். அதனால் அது போகிற போக்கிலேயே போகட்டும் என்று விட்டுவிட்டான்.

உண்மையில் குதிரை வழிதவறி விடாமலே நடந்தது. ரஸ்தாவின் வளைவு நெளிவுகளை உணர்ந்து வலது புறம் திரும்பியும், அடுத்து இடதுபக்கம் திரும்பி-