பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

டால்ஸ்டாய் கதைகள்

பட்டிருந்த ஸ்திரீயின் மேல் பூராவும் பனி படிந்து விட்டது. அவள் தூக்கக் கிரக்கத்தினால் ஆடி அடிபட்டவன் வண்ணமிருந்தாள்.

‘நீங்கள் யார்?’ என்று கத்தினான் வாஸிலி.

‘ஆ-ஆ ....’ என்ற ஒலி மட்டும் தான் காதில் விழுந்தது.

‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன்.’

‘ஆ-ஆ-ஆ’ என்று தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கிக் கூவினான் ஒருவன். ஆனாலும் அவர்கள் யார் என்பதைக் கேட்டுப் புரிந்துகொள்ள இயலவில்லை.

‘முன்னே போ! தொடர்ந்து போ!’ என்று கூச்சலிட்டபடியே வேறொருவன் சவுக்கினால் ஓயாமல் குதிரையை அடித்துக்கொண்டே யிருந்தான்.

‘விருந்து முடிந்து திரும்பி வருகிறீர்கள், இல்லையா?’

‘போ, போ! வேகமாக விடு, சைமன்! முன்னாலே ஓட்டு! இன்னும் வேகமாக!’

இரண்டு வண்டிகளின் ஓரப் பகுதிகளும் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டன. மோதிப் பிணைந்து விடுவன போல் தோன்றின. ஆயினும், பிரிந்து விலகி விட்டன. குடியானவர்களின் வண்டி பின்தங்கலாயிற்று.

ரோமம் பற்றி வயிறு தள்ளிப் போயிருந்த குதிரையின் மேனி முழுவதும் பனி விழுந்து கிடந்தது. தணிவான சட்டங்களிடையே பூட்டப்பட்டிருந்த அந்தக் குதிரைக்கு மூச்சுத் திணறியது. அது தனது