பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

39

இறுதி வலு முழுவதையும் பிரயோகித்து அவ்வண்டியை இழுப்பதாகத் தோன்றியது. சவுக்கிலிருந்து தப்புவதற்கு வீணாகப் பாடுபட்ட அக் குதிரை தனது குட்டைக் கால்களினால் இழுத்து இழுத்து நடந்தது. அதன்மூலம், ஆழ்ந்து படிந்து கிடந்த பனியைத் தனக்கு அடியிலேயே தள்ளிக் கொண்டு அவதியுற்றது அது. அதன் நீண்ட மூஞ்சி இளமையாகக் காணப்பட்டது. அதன் கீழ் உதடு மீனுக்கு உள்ளது போல் மேல் நோக்கிப் படிந்திருந்தது. நாசிகள் விலகி விலகி இருந்தன. அதன் காதுகள் பயத்தினால் ஒடுங்கிக் கிடந்தன. அந்த முகம் கொஞ்ச நேரம் நிகிட்டாவின் தோளருகே வந்தது; பிறகு பின்னுக்குப் போய்விட்டது.

‘மது என்ன வேலை பண்ணுகிறது பாரேன்! அவர்கள் அந்தச் சின்னக் குதிரையைச் சாகடித்து விட்டார்களே, வெறியர்கள்!’ என்று நிகிட்டா சொன்னான்.

அந்தச் சிறிய குதிரையின் பெருமூச்சும், குடியானவர்களின் குடிவெறிக் கூச்சலும் சில நிமிஷ நேரம் அவர்கள் காதுகளில் விழுந்தன. பிறகு நெடு மூச்சும் கூச்சலும் தூரத்திலே கரைந்து போயின. அப்புறம் அங்கே சுற்றிலும் வேறு எதையும் அவர்கள் கேட்க முடியவில்லை காற்றின் வீச்சொலிதான் அவர்கள் காதுகளைத் தாக்கியது. காற்றில் அடிபட்டு உறைபனி நீங்கிக் கிடந்த ரோட்டுப் பகுதி எதிலாவது வண்டியின் சறுக்கிகள் உராய்ந்து எழுப்பிய ஓசையும் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது.

இந்தச் சந்திப்பு வாஸிலிக்கு உற்சாகமும் உத்வேகமும் அளித்து விட்டது. ஆகவே அவன் அடை-