பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

41

அவன் நெடுநேரம் தேடித் திரிந்தான். கடைசியாக அவன் திரும்பி வந்தான்.

‘இங்கே ரஸ்தா எதுவும் இல்லை. ரொம்ப தூரத்துக்கு அப்பால் இருந்தாலும் இருக்கலாம்’ என்று சொல்லி, அவன் வண்டியில் ஏறிக்கொண்டான்.

இந்த நிலையில், இருள் வேறு பரவிக்கொண்டிருந்தது. பனிப்புயல் அதிகரிக்கவில்லை. ஆனால் அடங்கி விடவுமில்லை.

‘அந்தக் குடியானவர்களின் குரலை மட்டும் கேட்க முடியுமானால்.....’ என்றான் வாஸிலி.

‘அவர்கள் நம்மை எட்டிப் பிடிக்கவில்லை. நாம் ரொம்ப தூரம் விலகி வந்திருக்க வேண்டும். அல்லது, ஒருவேளை அவர்களும் வழிதவறிப் போயிருக்கலாம்’ என்று நிகிட்டா சொன்னான்.

‘அப்படியானால் நாம் எங்கே போவது?’

‘ஏன், குதிரையை அதன் போக்கிலேயே போக விட வேண்டியது தான். அது நம்மை சரியான வழியில் கொண்டு சேர்க்கும். வார்களை என்னிடம் கொடுங்கள்’ என்றான் நிகிட்டா.

வாஸிலி ஆன்ட்ரீவிச் கடிவாள வார்களை நிகிட்டாவிடம் கொடுத்துவிட்டான் மிகுந்த மனோதிருப்தியுடன்தான். ஏனென்றால் அவனது கைகள் தடித்த உறைகளுக்குள் இறுகிப்போவது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

நிகிட்டா வார்களைக் கைப்பற்றினான். ஆனால் சும்மா பிடித்தபடி வைத்திருந்தான். அவற்றை அசைக்காமலிருக்கவே அவன் முயற்சித்தான். தனது அபி-