பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

டால்ஸ்டாய் கதைகள்

சிறுவனின் ஆலோசனையின் பேரில் அவன் தொழுவத்தை நோக்கி குதிரையைப் பின்னுக்கடித்தான்.

தரையில் கழிவுபொருள்கள் பரவிக் கிடந்தன. குதிரையின் தலைக்கு மேலாக நீட்டிக்கொண்டிருந்த சட்டம் தொழுவத்தின் கூரைக் கம்பில் மாட்டிக் கொண்டது. பெட்டைக் கோழிகளும் ஒற்றைச் சேவலும் இதற்கு முன்னாடியே அங்கு தூங்குவதற்காக ஒண்டியிருந்தன. இப்போது அவை தங்கள் கால் விரல்களினால் அந்தக் கட்டையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு எரிச்சலோடு குரல் எழுப்பின. கலைக்கப்பட்ட ஆடுகள் ஓடி ஒதுங்கி, தரையில் உறைந்து கிடந்த கழிவுகளைத் தங்கள் குளம்புகளினால் மிதித்துச் சமட்டிக் கொண்டு விலகிப் பாய்ந்தன. நாய் பயத்தினாலும் கோபத்தாலும் மூர்க்கமாகக் கத்தியது. பிறகு அந்நியனை நோக்கி சின்னக் குட்டி போல் விட்டு விட்டுக் குரைத்தது.

அவை எல்லாவற்றோடும் நிகிட்டா பேசினான். கோழிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான். இனி மறுபடியும் அவற்றிற்குத் தொந்தரவு கொடுக்கப் போவதில்லை என்று அவன் உறுதி கூறினான். காரணமில்லாமலே பயந்து ஓடியதற்காக ஆடுகளைக் கடிந்தான். குதிரையைக் கட்டிப்போட்டவாறே, நாயை சாந்தப்படுத்தினான்.

‘இனி எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்லி, அவன் தன் ஆடைகளிலிருந்த பனியைத் தட்டிக் கீழே தள்ளினான். ‘அது எப்படிக் குரைக்கிறது பாரேன்!’ என்றான். பிறகு நாயின் பக்கம் திரும்பி 'சும்மா இரு, முட்டாளே. சும்மா கிட. ஒன்றும் இல்லாததற் கெல்லாம் உன்னையே நீ அலட்டிக் கொள்-