பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

47

கிறாய், நாங்கள் திருடர்கள் இல்லையே. நண்பர்கள் தான்......'

‘வீட்டிலிருக்கும் மூன்று ஆலோசகர்கள் என்று இவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்’ என்று சிறுவன் சொன்னான். வெளிப்புறத்திலேயே தங்கிவிட்ட வண்டியை அவன் தனது வலிய கரங்களினால் கூரைக்கு அடியில் தள்ளினான்.

‘ஆலோசகர்கள் என்பது ஏனோ?’ என்று நிகிட்டா கேட்டான்.

‘பால்ஸன் புத்தகத்தில் அப்படித்தான் அச்சடிக்கப்பட்டுள்ளது. கள்ளன் ஒருவன் வீட்டினுள் நுழைகிறான். நாய் குரைக்கிறது. அப்படி யென்றால், “விழிப்புடன் இருங்கள்” என்று அர்த்தம். கோழி கூவுகிறது. அதாவது “எழுந்திருங்கள்!” என்று பொருள். பூனை தன்னையே நக்கிக் கொள்கிறது. அதற்கு என்ன அர்த்தம்? “வரவேற்புக்குரிய விருந்தாளி வந்திருக்கிறான். அவனை எதிர்கொண்டு அழைக்கத் தயாராகுங்கள்!” என்று தான்.’ இவ்விதம் விளக்கினான் சிறுவன், சிரித்தபடியே.

பெட்ரூஷ்காவுக்கு எழுதப் படிக்கத் தெரியும். ‘பால்ஸன் ஆரம்பவாசகம்’ தான் அவன் கற்ற ஒரே புத்தகம். புத்தகத்தின் விஷயம் பூராவும் அவனுக்கு மனப்பாடம் ஆகியிருந்தது. ஆகவே, சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமானது என்று அவன் கருதிய வாசகங்களை அவ்வப்போது ஒலிபரப்புவதில் அவனுக்கு ஆசை அதிகம். அதிலும் ஏதாவது குடிவகை உள்ளே போய்விட்டால் அவனுக்கு ஏக உற்சாகம் தான். இன்றைக்கு அதே நிலைமை தான்.