பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

49


இப்போது அந்த வீட்டில் கிழவன், அவன் மனைவி, வீட்டு நிர்வாகத்தைக் கவனித்து வந்த இரண்டாவது மகன், பண்டிகைக்காக மாஸ்கோவிலிருந்து வந்திருந்த மூத்தவன் ஆகியவர்களோடு எல்லாப் பெண்களும் குழந்தைகளும் இருந்தார்கள். குடும்பத்தைச் சேர்ந்த இவர்களைத் தவிர, வேறெருஅதிதியும் அங்கு காணப்பட்டான். அடுத்த வீட்டுக்காரன் தான் அவன். அங்கிருந்த ஒரு குழந்தைக்கு ‘ஞான ஸ்நான’த் தந்தை அவன்.

அந்த அறையிலிருந்த மேஜைக்கு உயரே ஒரு விளக்கு தொங்கியது. அதற்கு மேலாக மூடியிட்டு மறைத்திருந்ததனுல் ஒளிவீச்சு கீழே உள்ள தேநீர்ப் பாத்திரங்களையும் மதுப்புட்டியையும் இதர தின்பண்டங்களையும் பிரகாசப்படுத்தியது. அத்துடன், செங்கல் சுவர்களையும், அவற்றின் தூரத்து மூலையில் தொங்கிய விக்கிரகங்களையும், அவற்றிற்கு இரண்டு புறங்களிலும் கிடந்த படங்களையும் வெளிச்சமாக்கியது. மேஜையின் முன்பு முதலில் வாஸிலி ஆன்ட்ரீவிச் பனியால் உறைந்திருந்த தன் மீசையைச் சுவைத்தபடி உட்கார்ந்திருந்தான். எடுப்பான கழுகுக் கண்களினால் அவன் அந்த அறையையும், தன்னைச் சுற்றிலுமிருந்த ஆட்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தான். அவன் கூட, வெண்தாடி உடைய வழுக்கைத் தலைக் கிழவன் இருந்தான். குடும்பத் தலைவனான அவன் வீட்டிலே நெய்யப் பெற்ற வெள்ளைத் துணிச் சட்டையுடன் காட்சி அளித்தான். மாஸ்கோவிலிருந்து பண்டிகைக்காக வந்திருந்த மகன் அவனுக்கு அடுத்தாற் போல இருந்தான். உரம் பொருந்திய முதுகும், வலிமை நிறைந்த தோள்களும் பெற்றவன் அவன். அவன்

64—5