பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

டால்ஸ்டாய் கதைகள்

வர்ணம் அச்சிட்ட மென்துணிச் சட்டை அணிந்திருந்தான். அவனுக்கு அருகே இரண்டாவது மகன் காணப்பட்டான். அவனும் அகன்ற தோள்களை உடையவன்தான். குடும்ப நிர்வாகத்தை ஏற்று நடத்தியவன் அவனே. அவனுக்குப் பக்கத்தில், மெலிந்த செந்தலைக் குடியானவன்—அடுத்த வீட்டுக்காரன்—இருந்தான்.

வோட்கா குடித்து எது எதையோ தின்று தீர்த்த பிறகு, தேநீர் குடிக்க வேண்டிய கட்டத்தில் இருந்தார்கள் அவர்கள். தரைமீது செங்கல் அடுப்புக்குப் பக்கத்தில் நின்ற ஸமோவார் இதற்குள் சூடு பெற்று இரைச்சலிட்டுக் கொண்டிருந்தது. உயர்ந்த தளவரிசை மீதும், கணப்பு அடுப்பின் மேல் பகுதியிலும் குழந்தைகள் காணப்பட்டனர். 'தணிவான கட்டுமானம் ஒன்றில், தனக்கு அருகில் ஒரு தொட்டிலோடு, ஒரு மங்கை இருந்தாள். வயதான குடும்பத் தலைவி வாஸிலிக்கு உபசாரம் செய்து நின்றாள். அவள் முகம் பூராவும் சுருக்கங்கள் பரவிக் கிடந்தன். அவள் உதடுகளில்கூட சுருக்கம் விழுந்திருந்தது.

நிகிட்டா உள்ளே பிரவேசித்த சமயத்தில், அவள் கனமான கண்ணாடித் தம்ளர் ஒன்றை வோட்காவினால் நிரப்பி, அதை விருந்தாளி பக்கம் நீட்டி உபசரித்துக் கொண்டிருந்தாள்.

‘வேண்டாம் என்று சொல்லாதே, வாஸிலி ஆன்ட்ரீவிச். நீ அப்படிச் சொல்லக்கூடாது. எங்களோடு கூடினால் குதூகலமான விருந்துதான். இதைக் குடித்துவிடு, அன்பே !’ என்றாள் அவள்.

வோட்காவின் தரிசனமும், அதன் மணமும் நிகிட்டாவின் உள்ளத்தில்—அதிலும் இந்தச் சந்தர்ப்-