பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

51

பத்தில், உள்ளும் புறமும் குளிரிட்டுப்போய் களைப்பினால் சோர்ந்திருந்தபோது—அதிகமான குழப்பத்தை உண்டாக்கி விட்டன. அவன் முகத்தைச் சுழித்தான். தனது குல்லாயிலும் கோட்டு மேலும் ஒட்டிக் கொண்டிருந்த பனியைத் தட்டி உதறிய பிறகு அவன், வேறு யாரையும் பார்க்காதவன் போல, விக்கிரகங்களின் முன்னால் நின்று மூன்று தடவைகள் தனக்குத்தானே சிலுவை அடையாளம் செய்து கொண்டான். தலை தாழ்த்தி விக்கிரங்களை வணங்கி விட்டுத் திரும்பினான். முதலில் குடும்பத் தலைவனுக்கும், பின்னர் மேஜை முன்னிருந்த எல்லோருக்கும், அதற்குப் பிறகு அடுப்பருகே நின்ற பெண்களுக்கும் வணக்கம் தெரிவித்தான் அவன். ‘குதூகலமான பண்டிகை ஆகட்டும்!’ என்று முனங்கியவாறே, அவன் தனது மேல் ஆடைகளை அகற்ற ஆரம்பித்தான். அவன் பார்வை மேஜையின் பக்கம் செல்லவே இல்லை.

மூத்த மகன் நிகிட்டாவின் பனி படிந்த முகத்தையும் கண்களையும் தாடியையும் கவனித்தபடியே சொன்னான், ‘அடடா! உமது உடம்பு பூராவும் பனி மூடிவிட்டதே, பெரியவரே’ என்று.

நிகிட்டா தனது கோட்டைக் கழற்றினான். அதை மறுபடியும் உதறி, அடுப்புக்குப் பக்கத்திலே தொங்கப் போட்டு விட்டு, மேஜையை அடைந்தான். அவனுக்கும் வோட்கா கொடுக்கப்பட்டது. அவனுக்கு வேதனை மிகுந்த தயக்கம் ஏற்பட்டது. அநேகமாக அவன் அந்த மதுக் கோப்பையை வாங்கி, மணம் நிறைந்த தெளிவான பானத்தை உள்ளே ஊற்றியிருப்பான். ஆனால் அவன் பார்வை வாஸிலி ஆன்ட்ரீவிச் மீது படிந்தது. தான் செய்து கொண்ட சபதத்தின்