பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

டால்ஸ்டாய் கதைகள்


‘பெட்ரூஷ்கா’ போ, போய் குதிரையைப் பூட்டு, என்று மூத்தவன் சொன்னான்.

‘ரொம்ப நல்லது’ என்று புன்னகையுடன் தெரிவித்தான் பெட்ரூஷ்கா. உடனடியாக, ஆணியில் கிடந்த தொப்பியை எடுத்துக்கொண்டு, அவன் வண்டியை பூட்ட ஓடினான்.

வண்டியில் குதிரை பூட்டப்படுகிற வேளையில், உள்ளே பேச்சு, வாஸிலி ஆன்ட்ரீவிச் ஜன்னல் ஓரத்துக்கு வந்து சேர்ந்த போது விடுபட்டுப்போன கட்டத்திற்கு மீண்டும் திரும்பியது. அண்டைவீட்டில் இருந்தவன் தான் ஊரின் பெரியதனக்காரன். அவனிடம் குடும்பத் தலைவன் தனது மூன்றாவது மகனைப் பற்றிக் குறை கூறிக்கொண்டிருந்தான். அவன் பண்டிகைக்காக வீட்டுக்கு எதுவும் அனுப்பிவைக்கவில்லை ; ஆனால் தனது மனைவிக்கு பிரஞ்சு தேசத்துச் சால்வை ஒன்று அனுப்பியிருக்கிறான் என்று முறையிட்டான்.

‘வாலியப் பையன்கள் நம்மை மிஞ்சி வளர்ந்து விட்டார்கள்’ என்று கிழவன் சொன்னான்.

‘ஆமாம், எப்படி ஆகிவிட்டார்கள்! அவர்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை. அவர்கள் ரொம்ப ரொம்பக் கற்று விட்டார்கள் டிமோச்கின் இருக்கிறானே, அவன் தனது அப்பாவின் கையையே ஒடித்து விட்டான். இதெல்லாம் எதனால் வருகிறது? ரொம்ப ரொம்பப் புத்திசாலி ஆகிவிடுவதனால்தான்’ என்று அடுத்த வீட்டுக்காரன் பேசினான்.

நிகிட்டாவும் இந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டி ருந்தான். பேசியவர்கள் முகங்களை உற்றுக் கவனித்த-