பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

டால்ஸ்டாய் கதைகள்


ஆகவே, விடை பெற்றுச் செல்லத் துணிந்த பிரயாணிகளைத் தடுத்து நிறுத்துவார் அங்கே எவருமில்லை.

5

வாஸிலி ஆன்ட்ரீவிச் தனது வண்டி அருகே போனான். இருட்டில் சிரமத்தோடு அதைக் கண்டு பிடித்து உள்ளே ஏறிக்கொண்டான். கடிவாள வார்களைக் கையில் பற்றியதும், ‘நீ முன்னாலே போ!’ என்று கத்தினான்.

பெட்ரூஷ்கா தனது தணிவான வண்டியில் மண்டியிட்டு அமர்ந்தவாறே குதிரையைத் தட்டிவிட்டான். சற்று நேரத்துக்கு முன்பிருந்தே கனைத்துக் கொண்டு தின்ற முக்கார்ட்டி தனக்கு முன்னால் ஒரு குதிரை செல்வதை உணர்ந்து அதைத் தொடர்ந்து ஓடியது.

அவர்கள் வீதியை அடைந்தார்கள். மறுபடியும் ஊரின் எல்லைப்புறமாகப் போனார்கள். திரும்பவும் அதே ரோடு வழியாகவும், உறைந்து போன, துணிகள் ஊசலாடிக் கிடந்த முற்றத்தின் வழியாகவும் சென்னார்கள். (இந்தத் தடவை துணிகள் அங்கே காணப்படவில்லை.) பழைய களஞ்சியத்தைக் கடந்தார்கள். இப்போது அதன் கூரை முழுவதும் பனியினால் மூடப்பட்டு விட்டது போல் தோன்றியது. அங்கிருந்து பனி இன்னும் முடிவே இல்லாமல் கீழே கொட்டிக் கொண்டு தானிருந்தது. சோக ஒலி எழுப்பி, கீச்சிட்டு, ஆடி அசைந்து நின்ற வில்லோ மரங்களையும் கடந்து போனார்கள் அவர்கள். மேலிருந்து இறங்கியும் கீழிருந்து எழுந்தும் சாடிச் சுழன்று இரைச்சலிட்டுக்