பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

63

கொண்டிருந்த பனிக்கடலினுள் மீண்டும் புகுந்தார்கள். காற்று மிகவும் பலம் பெற்று வீசியது. அது ஒரு பக்கத்திலிருந்து வீசுகிறபோது, பிரயாணிகள் அதை எதிர்த்து முன்னேறுகையில், வண்டிகளை ஓர் புறமாய் சாய்த்து, குதிரைகளை ஒரு பக்கமாகத் திருப்பியது அதன் வேகம்.

தனது அருமையான குதிரையை வேக நடையில் முன்னால் போகும்படி ஓட்டினான் பெட்ரூஷ்கா. அவன் உணர்ச்சிகரமாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். முக்கார்ட்டி வேகமாகத் தொடர்ந்தது.

இப்படிப் பத்து நிமிஷ நேரம் பிரயாணம் செய்த பிறகு, பெட்ரூஷ்கா வட்டமிட்டுத் திரும்பி, உரத்த குரலில் ஏதோ சொன்னான். வாஸிலியோ நிகிட்டாவோ, காற்றின் காரணமாக, எதையும் கேட்க முடியவில்லை. என்றாலும், திருப்பத்துக்கு வந்து சேர்ந்து விட்டதாக அவர்கள் ஊகித்தார்கள். ஆமாம். பெட்ரூஷ்கா வலது பக்கம் திரும்பிவிட்டான். முன்பு பக்கவாட்டில் அடித்துக்கொண்டிருந்த காற்று இப்போது அவர்கள் முகங்களின் மீது நேராக வீசியது. தங்களுக்கு வலது பக்கத்தில் எதுவோ கறுப்பாகத் தெரிவதையும் பனியினூடாக அவர்கள் காணமுடித்தது. திருப்பத்தில் உள்ள புதர்தான் அது.

‘நல்லது. நீங்கள் வேகமாக முன்னேற ஆண்டவன் அருள் புரியட்டும்!’ என்றான் சிறுவன்.

‘உனக்கு நன்றி, பெட்ரூஷ்கா!’

‘பனியொடு புயலைப் பதுக்கிடும் வானம்!’ என்று கூவியவாறே மறைந்து போனான் பெட்ரூஷ்கா.