பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

டால்ஸ்டாய் கதைகள்


நிகிட்டா பேசாமல் வண்டியை விட்டு இறங்கினான். காற்று ஒரு கணம் அவன் கோட்டை உடலோடு உடலாக ஓட்டிச் சேர்த்தும், மறுகணம் பிய்த்து இழுத்தும் விளையாடியது. அவன் அதை இறுகப் பற்றியபடியே, பனி நடுவே பாதையைத் தேடி, முதலில் ஒரு பக்கத்திலும் பிறகு அடுத்த பக்கத்திலுமாக அலைந்தான். மூன்று அல்லது நான்கு தடவைகள் அவன் அடியோடு மறைந்தே போனான். கடைசியாகத் திரும்பி வந்ததும் அவன் லகானை வாஸிலி கையிலிருந்து வாங்கிக்கொண்டான்.

‘நாம் வலதுபக்கம் போகவேண்டும்’ என்று அவன் கண்டிப்பாகவும் உறுதியோடும் சொல்லி குதிரையைத் திருப்பினான்.

‘சரிதான். வலது பக்கம்தான் பாதை இருக்கிறதென்றால், வலது பக்கமே போ’ என்று வாஸிலி சொன்னான் நிகிட்டாவிடம். வார்களைக் கொடுத்து விட்டு அவன் விறைத்துப் போன தனது கைகளைச் சட்டைக்குள் திணித்துக்கொண்டான்.

நிகிட்டா பதில் சொல்லவில்லை.

‘இப்போ, நண்பரே, சுறுசுறுப்பு பெற்றுக்கொள்ளும்!’ என்று அவன் குதிரையிடம் கத்தினான். அவன் லகானை பலமாக அசைத்து ஆட்டிய போதிலும் குதிரை மெதுவான நடையிலே தான் முன் சென்றது.

சில இடங்களில் பனி முழங்கால் அளவுக்கு நிறைந்து கிடந்தது. குதிரையின் ஒவ்வொரு அசைவுக்கும் தகுந்தபடி வண்டி குலுங்கிக் குலுங்கி நகர்ந்து சென்றது.