பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

73


ஒரு பாய்ச்சல். அப்புறம் ஒன்று. மூன்றாவதாக ஒன்று. கடைசியில் முக்கார்ட்டி பனி ஓட்டத்தை விட்டு வெளியேறிவிட்டது. அது அசையாது நின்று பெருமூச்சு உயிர்த்தது. பிறகு தன் தேகத்தைச் சிலிர்த்து பனியை உதறிக்கொண்டது. அதை மேலும் நடத்திச் செல்ல விரும்பினான் நிகிட்டா.

ஆனால், ரோமம் நிறைந்த இரண்டு கோட்டுகள் அணிந்திருந்த வாஸிலி ஆன்ட்ரீவிச்சுக்கு நெடுமூச்சு வாங்கியது. மேற்கொண்டு அடி எடுத்து வைக்க முடியவில்லை அவனால். அதனால் அவன் வண்டியினுள்ளே சாய்ந்துவிட்டான். ‘நான் சரியாக மூச்சு விடட்டும்!’ என்று சொன்னான். அவன் கிராமத்திலிருந்து புறப்படும்போதே ரோம அங்கியின் காலரை இறுக்கிக் கட்டி வைத்திருந்த கைக்குட்டையை இப்பொழுது அவிழ்த்துவிட்டான்.

‘இங்கே நன்றாகத்தான் இருக்கிறது. நீங்கள் அங்கேயே படுத்திருக்கலாம். நான் இதை வழி நடத்திச் செல்கிறேன்’ என்று நிகிட்டா தெரிவித்தான். வாஸிலியை வண்டியில் வைத்து அவன் குதிரையின் லகானைப் பற்றி முன்னால் இட்டுச் சென்றான். சுமார் பத்து அடி தூரம் கீழ் நோக்கிச் சென்றான். பிறகு சிறிய ஏற்றம் ஒன்றின் மீது நடத்திச் சென்றான். அப்புறம் நின்று விட்டான்.

நிகிட்டா நின்ற இடம் முற்றிலும் பள்ளமான பகுதியில் இல்லை. அப்படி இருந்தால், குன்றுகளிலிருந்து அடித்து வரப்பெற்ற பனி அவர்களை ஒரே அடியாக மூடிப் புதைத்திருக்கும். இந்த இடம் கணவாயின் ஒரு புறமாக, காற்றுக்கு ஓரளவு அடக்கமாக,