பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

75


‘வண்டியை நாம் வேறு எங்காவது ஓட்ட முடியாதா?’

‘ஊகுங். முடியாது. நாம் குதிரையைச் சாகடித்து விடுவோம். ஏன், அந்த அப்பாவிப் பிராணி இப்ப கூட பழைய நிலைமையில் இல்லையே’ என்று நிகிட்டா குதிரையைச் சுட்டிக்காட்டினான். என்ன நேரிடுமோ என்று எதிர்பார்த்து அடக்க ஒடுக்கமாக நின்றது அது. நனைந்து போயிருந்த அதன் விலாப்புறங்கள் பெருமூச்சினால் விம்மித் தணிந்து கொண்டிருந்தன.

‘ராத்திரிப் பொழுதை இந்த இடத்திலேயே தங்கிக் கழிக்க வேண்டியதுதான்’ என்று அவன். சொன்னான், வசதியான ஏதோ ஒரு விடுதியில் தங்கி விட ஆயத்தம் செய்து கொண்டிருப்பது போல. பிறகு அவன் குதிரையின் கழுத்துப் பட்டைகளை அவிழ்ப்பதில் முனைந்தான். வார்ப் பூட்டுகள் விடுபட்டன.

‘ஆனால் நாம் உறைந்து போக மாட்டோமா?’ என்று வாஸிலி கேட்டான்.

‘உம். அப்படி நேருமானால் அதை நாம் தடுத்து விட முடியாது’ என்று தெரிவித்தான் நிகிட்டா.

6

வாஸிலி ஆன்ட்ரீவிச் ரோமம் நிறைந்த மேல் அங்கிகள் இரண்டு அணிந்திருந்தான். அதனால் பனி ஓட்டத்தில் போராடி முடித்த பிறகும், கதகதப்பு பெற்றுதான் இருந்தான். என்றாலும் உண்மையாகவே இரவுப் பொழுதை அவர்கள் இருந்த இடத்திலேயே கழித்தாக வேண்டும் என்று புரிந்து கொண்டதும் அவன் முதுகந்தண்டில் ‘சில்’லெனக் குளிர் உணர்வு