பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

டால்ஸ்டாய் கதைகள்

ஊர்ந்தது போலிருந்தது. தன்னைத் தானே சாந்தப்படுத்திக் கொள்வதற்காக அவன் வண்டியினுள் உட்கார்த்து, சிகரெட்டுகளையும் தீக்குச்சிகளையும் வெளியே எடுத்தான்.

நிகிட்டா முக்கார்ட்டியை அவிழ்த்து விடும் வேலையில் கவனமாக இருந்தான். வயிற்றுப் பட்டையையும் முதுகு வாரையும் அவிழ்த்தான். கடிவாள வார்களை அகற்றினான். கழுத்துப் பட்டையைத் தளரச் செய்தான். சட்டங்களை எடுத்துவைத்தான். இவற்றை எல்லாம் செய்கிறபோதே குதிரையை உற்சாகப்படுத்துவதற்காக அவன் பேசிக்கொண்டே யிருந்தான்.

‘இப்போ வெளியே வா. வெளியே வா!’ என்று சொல்லி வண்டிச் சட்டங்களுக்கு அப்பால் அதை இட்டுச் சென்றான். ‘இப்ப நான் உன்னை இங்கே கட்டிப் போடுவேன். உன் முன்னால் வைக்கோல் போட்டு வைக்கிறேன். உனது கடிவாளத்தையும் கழற்றி விடுகிறேன். கொஞ்சம் வைக்கோலைக் கடித்த உடனேயே உனக்கு உற்சாகம் ஏற்பட்டுவிடும்’ என்றான்.

ஆயினும் முக்கார்ட்டி அமைதி இழந்து தவித்தது. நிகிட்டாவின் பேச்சுகளினால் அது ஆறுதல் அடைய முடியவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. ஒரு கணம் அது ஒரு காலை எடுத்து வைத்து நின்றது. மறுகணம் காலைமாற்றி வேறொன்றின் மீது நிற்கும் வண்டியோடு ஒடுங்கி நெருங்கியது அது. தனது பின்புறத்தைக் காற்றின் பக்கமாகத் திருப்பிக்கொண்டு, தன் தலையை நிகிட்டாவின் கையில் உரசியது. அப்புறம், அவன் தந்த வைக்கோலை மறுதளித்து நிகிட்டாவுக்கு மனவருத்தம் உண்டாக்க விரும்பாததுபோல,