பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

77

வண்டிக்குள்ளிருந்து ஒரு வாய் வைக்கோலைக் கவ்வி இழுத்தது. ஆனால் உடனடியாகவே வைக்கோலைப் பற்றி நினைப்பதற்கு இது தருணமல்ல என்று முடிவு கட்டி விட்ட மாதிரி அதைக் கீழே போட்டது. உடனே காற்று அதைச் சிதறியது; அள்ளி எடுத்து அப்பால் எறிந்தது; பனியினால் மூடி மறைத்தது.

‘இப்போது நாம் இங்கே ஒரு அடையாளம் அமைப்போம்’ என்று நிகிட்டா சொன்னான். அவன் வண்டியின் முன்பக்கத்தைக் காற்றுக்கு நேராகத் திருப்பினான். அதன் சட்டங்களை ஒரு வாரினால் சேர்த்துக் கட்டி, முன்புறத்தில் வண்டிக்கு மேலாகி நட்டுவைத்தான், ‘இப்ப சரியாகப் போச்சு. பனி நம்மை மூடிவிட்டாலும் கூட நல்ல மனிதர்கள் இந்தச் சட்டங்களைப் பார்த்ததும் தோண்டி நம்மை வெளியே எடுத்துவிடுவார்கள்’ என்றான் அவன் கையுறைகளைத் தட்டி மாட்டிக் கொண்டே அவன் ‘பெரியவர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம் இது’ என்றும் சொன்னான்.

வாஸிலி ஆன்ட்ரீவிச் தனது கோட்டைத் தளர்த்தி விட்டு, பாதுகாப்பிற்காக அதன் விளிம்பைத் தூக்கிப் பிடித்து, கந்தகத் தீக்குச்சிகளை ஒன்றின்பின் ஒன்றாக இரும்புப் பெட்டியின் மீது உராய்ந்து கொண்டிருந்தான். ஆனால் அவனது கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததால், ஒவ்வொரு தீக்குச்சியும் பற்றிக் கொள்ளாமலே கருகியது. அல்லது சிகரெட்டின் அருகே அவன் உயர்த்துகிற சமயத்தில் காற்றினால் அணைக்கப் பட்டுவிட்டது. இறுதியில் ஒரு குச்சியில் தீ பிடித்துக் கொண்டது. அதன் சுவாலை ஒருகணம் அவனுடைய கோட்டின் ரோமச் செறிவையும், குவிந்-