பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

79


‘எவ்வளவு அருமையான கொடி பார்!’ என்று வாஸிலி தனது கைவண்ணத்தைத்தானே வியந்து போற்றியவாறே, வண்டியினுள் நழுவினான். ‘நாம் ஒன்றாகச் சேர்ந்து இருந்தால் கதகதப்பாகத் தானிருக்கும். ஆனால் உள்ளே இரண்டு பேருக்கு இடமில்லையே’ என்றான் அவன்.

‘எனக்கு இடம் நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் நான் குதிரையை நன்றாகப் போர்த்தியாக வேண்டும். பாவம், அதற்கு ஏகமாக வேர்த்துவிட்டது. சரி, இதை விடுங்கள்’ என்று கூறி நிகிட்டா, வாஸிலிக்குக் கீழே கிடந்த முரட்டுக் கம்பளித் துணியைப் பற்றி இழுத்தான்.

அதை வெளியே எடுத்ததும் இரண்டாக மடித்தான். குதிரை மீது கிடந்த சேணத்தையும் பட்டைகளையும் நீக்கிவிட்டு கம்பளியைப் பரப்பி அதை மூடினான். ‘எப்படியானாலும் இன்னும் கொஞ்சம் உஷ்ணமாக இருக்கட்டுமே!’ என்று முனங்கி, பட்டைகளையும் சேணத்தையும் திரும்பவும் குதிரைமீது கம்பளிக்கும் மேலாகப் போட்டு வைத்தான்.

அந்த வேலையைக் கவனித்து முடித்த பிறகு அவன் வண்டியின் பக்கம் வந்தான். ‘அந்தச் சாக்குத் துணி உங்களுக்குத் தேவைப்படாது. இல்லையா? எனக்குக் கொஞ்சம் வைக்கோலும் கொடுங்கள்’ என்று வாஸிலியிடம் சொன்னான் அவன்.

வாஸிலிக்குக் கீழேயிருந்து இவற்றை எடுத்துக் கொண்டதும் நிகிட்டா வண்டியின் பின்புறமாகச் சென்று பனியில் தனக்காக ஒரு குழி பறித்தான். அதில் வைக்கோலைப் பரப்பிவிட்டு, தனது உடம்பில்