பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

81

திரட்ட முடியும்; அவன் அறிந்த இதர மனிதர்கள் எவ்வளவு சேர்த்து வைத்திருந்தார்கள்; அவர்கள் எப்படிப் பணம் சேர்த்தார்கள்; இன்னும் எவ்வாறு சேர்த்துக் கொண்டிருந்தார்கள்; அவனும் அவர்களைப் போல மேன்மேலும் அதிகமாகப் பணம் சேகரிப்பது எப்படி என்றெல்லாம் சிந்தனை செய்தான் அவன். கோர்யாச்கின் தோப்பை விலைக்கு வாங்குவது மிகவும் முக்கியமான விஷயமாகப் பட்டது அவனுக்கு. அந்த ஒரு பேரத்தின் மூலம் மட்டுமே பத்தாயிரம் ரூபிள்கள் லாபம் கிட்டலாம் என்று அவன் நம்பினான். தான் இலையுதிர் காலத்தில் பரிசீலனை செய்த மரங்களின் மதிப்பைப் பற்றியும், ஐந்து ஏக்கர் நிலத்திலிருந்த மரங்கள் எல்லாவற்றையும், அவன் எண்ணி முடித்திருந்ததனால், அவற்றின் மொத்த மதிப்பு பற்றியும், இப்பொழுது தன் மனசினால் கணக்குப் பண்ணத் தொடங்கினான்.

‘ஓக் மரங்கள் சறுக்கு வண்டிகளுக்காக உபயோகப்படும். தரைமட்டத்தில் வளர்ந்துள்ளவை பலவழிகளில் பயனாகும். இவை எல்லாம் போக ஒவ்வொரு பகுதியிலும் முப்பது வண்டி விறகாவது தேறும்’ என்று அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். ‘அப்படியென்றால் ஒரு பிரிவில் குறைந்தபட்சம் இருநூற்று இருபத்தைந்து ரூபிள்கள் கிடைக்கும் என்றாகிறது. ஐம்பத்தாறு பிரிவுகள் என்றாகிற போது, ஐம்பத்தாறு நூறுகள்; அதோடு ஐம்பத்தாறு நூறுகள்; மேலும் ஐம்பத்தாறு பத்துகள்; இன்னொரு ஐம்பத்தாறு பத்துகள்; அப்புறம் ஐம்பத் தாறு அஞ்சுகள்....’ இந்த விதமாக சுமார் பன்னிரண்டாயிரம் ரூபிள்கள் வரும் என்று அவன் கணக்கிட்-

64—7