பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

85


ஒன்றும் இல்லாத நிலையிலே வாழ்க்கையைத் தொடங்கி லட்சாதிபதி ஆக உயர்ந்துவிட்ட மிரோனோவ் போல் தானும் தனவந்தன் ஆகிவிடலாம் என்ற நினைப்பே வாஸிலிக்கு மிகுந்த கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அதனால் யாருடனாவது பேச்சு கொடுக்கவேண்டும் என்ற துடிப்பு அவனுக்கு உண்டாயிற்று. ஆனால் அங்கு பேசுவதற்கு எவரும் இல்லையே.... அவன் மட்டும் கோர்யாச்கின் போய்ச் சேர முடிந்திருக்குமானால் அங்குள்ள நிலச் சொந்தக்காரரிடம் அவன் எவ்வளவோ பேசியிருப்பான்; ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைச் செய்து காட்டியிருப்பான்.

வண்டியின் முன்புறம் மோதி அடித்து, அதை வளையச் செய்து, அதன்மீது பனியை அள்ளிவீசி அறைந்து கொண்டிருந்த கடுங்காற்றின் ஓசையைக் கவனித்த அவன் நினைத்தான்; ‘எப்படி வீசுகிறது பார்! நம்மை மூடிவிடுகிற அளவுக்கு பனி விழும் என்று தெரிகிறது. அப்புறம் காலையில் தாம் வெளியே தலைகாட்டவே முடியாது!’

அவன் எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான். முக்கார்ட்டியின் கறுத்த தலையையும், காற்றில் ஆடிக் கொண்டிருந்த கம்பளித் துணி மூடிய முதுகையும், முடிச்சு போட்டிருந்த கனத்த வாலையும்தான் சூழ்ந்து கிடந்த இருளினூடாக அவன் கண்டுபிடிக்க முடிந்தது. மற்றப்படி எங்கு பார்த்தாலும், முன்னாலும் பின்னாலும், ஒரே நிலையில் இராத வெளிறிய இருட்டு–கொஞ்ச நேரம் சிறிது வெளிச்சம் பெற்றுவருவது போலவும், பிறகு சிறிது நேரம் மேலும் அதிகமாக இருண்டு