பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

டால்ஸ்டாய் கதைகள்

வருவதாகவும் மாறுபட்ட நிலைமைதான் நிறைந்திருந்தது.

நிகிட்டாவின் பேச்சைக் கேட்டது தப்பு. நாம் முன்னேறிப் போயிருக்க வேண்டும். எங்காவது நல்ல இடத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கலாம். கிரிஷ்கினோவுக்கே திரும்பிப் போயிருந்தாலும் பரவாயில்லை. டாராஸ் வீட்டில் இரவைக் கழித்திருக்கலாம். இப்பொழுது உள்ள நிலைமையில், ராத்திரி பூராவும் நாம் இங்கே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். ஆனால் நான் எதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்? ஆமாம். கஷ்டம் எடுத்துக் கொள்கிறவர்களுக்கே கடவுள் அருள்புரிகிறார்; சோம்பேறிகளுக்கும் தூங்கு மூஞ்சிகளுக்கும் முட்டாள்களுக்கும் அல்ல. இப்போது நான் புகை பிடித்தாக வேண்டும்!’ இவ்வாறு நினைத்தான் அவன்.

ஆகவே அவன் மறுபடியும் நன்றாக உட்கார்ந்து, சிகரெட் டப்பாவை வெளியே எடுத்தான். பிறகு வயிற்றின் மீது படுத்து, கோட்டின் விளிம்பால் மறைத்துக் கொண்டு தீக்குச்சிகளைப் பற்றவைக்க முயற்சித்தான். ஆனால் காற்று எப்படியோ உள்ளே புகுந்து தீக்குச்சிகளை ஒவ்வொன்றாக அணைத்து வந்தது. கடைசியில் அவன் ஒரு குச்சியில் நெருப்பு பிடிக்கச் செய்து அதன் உதவியால் சிகரெட்டைப் பற்றவைத்து விட்டான். தான் விரும்பிய காரியத்தைச் சாதிக்க முடிந்ததில் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சிதான். அவன் புகைத்ததைவிடப் பெரும்பங்கு சிகரெட்டை காற்றே காலி செய்துவிட்ட போதிலும் அவன் இரண்டு மூன்று ‘தம்’கள் ஊதமுடிந்தது. அதனால் அவனது உற்சாகம் அதிகரித்தது. திரும்பவும்