உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

95


புள்ளிகளையுடைய காரிக் குதிரையின் மேல் வீற்றிருக்கும் அவன், மறமாண்புடைய வீரன் ஆவான்!

"தெளிவாக அவனை மனத்தே நினைத்தாலும் அந்த நினைவே நடுக்கத்தை விளைக்கும். அத்தகைய ஒப்பற்ற வேலினை ஏந்தியிருப்பவனும் அவன்!

“குழிபட்ட பள்ளத்திலே, நீர்க்கண் விளங்கும் கெண்டை மீனின் வருகையை எதிர்பார்த்திருக்கும் நீல மணியின் நிறத்தைக் கொண்ட சிறிய சிரற்பறவைபோல, அவன் நம்முடைய நல்ல யானையணிகளின் ஒரு பகுதியைத் தன் திறையாக அளந்து போய்விடக்கூடியவன்!

நிலையமை நெடுந்திணை யேறி நல்லோரில் நிலைபொலி புதுப்பூண் கணவனோ டுடிச் சிந்தி யன்ன சேடுபடு வனப்பிற் புள்ளிக் காரி மேலோன் தெள்ளிதின் உள்ளினும் பனிக்கும் ஒருவே லோனே: , குண்டுநீர்க் கிடங்கிற் கெண்டை பார்க்கும் மணிநிறச் சிறுசிரல் போலநம் அணிநல் யானைக் கூறளக் கும்மே! (புறத் ; 1376)

இதனைக் கேட்ட சேரர் தலைவன், அவனுடைய தாக்கு தலை முறியடிக்குமாற்றால், தன் படையணிகளை மீளவும் முறைப்படுத்தினன் எனவும், அன்றைய போரும் கடுமையா யிருந்தது எனவும் கருதலாம். -

37. என்னதாகிலும் ஆக!

சேரர்க்குப் படைத்துணையாக வந்த குறுநிலத் தலைவர்களுள் ஒருவன், மிகுதியான பேராற்றல் உடையவனாகத் தகடூர்ப் படையினைத் தாக்கி அழித்து வருகின்றான். அவனுடைய ஆற்றலுக்கு முன்னால் தகடூர்ப்படை சிதையத் தொடங்குகின்றது. :

தம் படையினரின் அழிவைக் குறித்த செய்தி விரைந்து வந்து அறிவிக்கப்படத் தகடுர்நாட்டுத் தலைவருள் ஒருவன், 'அவனை யானே அழித்து வருவேன்’ எனக் கூறியவனாகத் தன்னுடைய போர்க் குதிரையின் மீதேறி, விரைந்து களத்தை நோக்கி வருகின்றான். -

அவனுடைய வருகையால் தகடூர்ப் படைக்குப் புதிய ஊக்கம் பிறக்கின்றது. அவனும் வந்து முனையில் தோன்ற,