பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

தகடூர் யாத்திரை


96 . . . * - தகடூர் யாத்திரை அவனைக் கண்டதும், சேரர் பகுதித் தலைவன் தன் அருகிருந்தாருடன் இவ்வாறு கூறுகின்றான். - “அவன் வருக! வருக! - "அவனை எவரும் தடுத்தல் வேண்டா! எவரும் தடுத்தல் வேண்டா' - - - “அஞ்சத்தக்க குதிரை மீதமர்ந்து, ஒப்பற்ற கை வேலினைக் கொண்டிருக்கும் யானோ, இருகையினரான மக்களைக் கண்டு அஞ்சுவதில்லேன். தொங்குகின்ற கையுடைய விலங்குகளான யானைகளின் வாழ்நாட்கள் அவன் கையால் முடிவதாகவெனப் பகுத்து வைக்கப் பெற்றிருக்கவும் இல்லை. - - "அவனும் வீரன்தான். அசைந்தாடும் ஒளியெறியும் மணிகளையுடைய வளைந்த பூணணிந்த மார்பினையும், கரிய தலையினையுமுடைய என்னைக் குறித்தே வருகின்றனன், “யானும் மணங்கமழும் உவகையோடு, கைவல்லமை உடையவனாகத் தோன்றும் என் துடியனுக்கு அவனுடைய அரையிடத்து விளங்கும் ஆடையைப் பரிசிலாகக் கொடுத்துள்ளேன். “அதனால், "என்னைக் கொன்று மீண்டுபோதல் என்பது அவனுக்கும் இவ்விடத்தே அரிதாகும். அங்ங்னமே அவனைக் கொன்று மீள்தல் என்பது எனக்கும் அரிதாகும்: "அதனால், * - , “இன்றைப் போரது முடிவு எவ்வாறாயினும் ஆகுக! “நீரினைக் கொண்டிருக்கும் பெருங்குளமானது கலங்கு மாறு, நாளைக் காலையில், நோயால் பொதியப்பட்ட தன் நெஞ்சம் குளிரும்படியாக அவன் தாய்தான் மூழ்குவாளோ? அன்றேல், என் தாய்தான் நாளைக் காலை மூழ்குவாளோ?" "அன்றி! என் தாயும் அவன் தாயும் சேர்ந்து முழுகுதல்தான் நேருமோ? யாங்ங்னம் ஆயினும் ஆகுக!” வருக! வருக! தாங்கன்மின் தாங்கன்மின்! உருவக் குதிரை ஒருவே லோனே; இருகை மாக்களை யானஞ் சலனே நாற்கை மாக்களின் நாட்டகத் தில்லை அவனும், தாரொடு துயல்வரும் தயங்குமணிக் கொடும்பூண்