பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

தகடூர் யாத்திரை


போர்க்களத்திலே குதிரைமேலமர்ந்து இருபாலும் பகைவீரரைச் சுற்றிச் சுழன்று வெட்டி வீழ்த்திக் களிப்புடன் வருகின்ற வீரனின் போராண்மையை, அவனுடைய குதிரை அடியிட்டு வருகின்ற பாணியைச் சிறப்பிப்பதன் மூலம் இங்ங்னம் சான்றோர் போற்றுகின்றனர்.

அடுதிறல் முன்பினன் ஆற்ற முருக்கிப் படுதலை பாறண்ண நூறி - வடியிலைவேல் வீசிப் பெயர்பவன் ஊர்த்தமாத் தீதின்றி நாண்மகிழ் தூங்குந் துடியன் துடிகொட்டும் பாணியிற் கொட்டும் குளம்பு. (புறத் 138)

குதிரைகளைத் தக்கபடி போர்ப்பயிற்சி செய்வித்திருந்தா லன்றி, அவை களத்தே பயன்படாமற் போய்விடும் என்பார்கள். அந்த வகையில் மிகவும் சிறப்பான போர்க்குதிரை இது எனலாம். இதனாற் குதிரைப் படைகள் தகடுராரிடம் மலிந்திருந்தன என்பதும் காட்டப்பெற்றது. .

39. தருமம் தானம் கருமம்!

இந்த நாளிலே தம் மகன் போர்வீரனாகப் பணியாற்றச் செல்கின்றான் என்றால், நம் தமிழ் நாட்டில் பல பெற்றோர்கள் அதனை உவப்புடன் வரவேற்பதில்லை. இந்த நிலை தமிழ்நாட்டில் எப்படி ஏற்பட்டதென்பதே நமக்குப்புரியவில்லை. போர் மறத்தாற் சிறந்து விளங்கிய தமிழர் பரம்பரையினர் என்று பெருமைப்படும் நாம், போர்ப்பணியினை ஏற்க முன்வராதது என்றால், முன் வருவதை வேண்டா வெறுப்பாக மேற்கொள்வ தென்றால், அது வருந்துதற்குரிய நிலைதானே! நாட்டிற்காகத் தம் உயிரையும் கொடுத்துக் காத்துநிற்கத் துணிவுடைய நல்ல வீரர்களையுடைய நாடுதான். நாடுகளுள் சிறப்புடையதாகிச் செம்மாந்து விளங்குவதற்கு உரியதாகும். அத்தகைய வீரர்கள் நம்மிடையே பெருகும்போதுதான், நாமும் நம்முடைய உரிமையைப் பேணி வாழுகின்ற சிறப்பினைப் பெற்று, வளமான வாழ்வினராகி உயர்வோம். o

இந்த வேளையில் தகடூர் நாட்டிலே ஒரு மூதாட்டி தன் மகனைப் போர்க்களத்திற்கு அனுப்பிவிட்டுக் கொள்ளுகின்ற பூரிப்பினை நாம் கருத்திற்கொண்டால், நம்முள்ளும் அந்த உணர்வு கிளர்ந்து எழுந்து ஒளிசெய்யத் தொடங்கும்.

தருமமும் ஈதேயாம் தானமும் ஈதேயாம் கருமமும் காணுங்கால் ஈதாம் - செருமுனையிற் கோள்வாள் மறவர் தலைதுமிய என்மகன் வாள்வாய் முயங்கப் பெறின்! )للقتال7 . ويوضب