பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

99


“தருமம் செய்வதனால் புண்ணியமுண்டு என்று சொல் கின்றார்கள். தானஞ் செய்பவன் பிற்பிறவியல் நற்கதி பெறு கின்றான் என்கிறார்கள். தனக்கு விதிக்கப்பட்ட கருமத்தைச் கைசோரவிடாதபடி மேற்கொள்பவர் சிறப்படைவர் என்கின்றார்கள்.” - -

“என் மகனோபோர்முனைக்குப் போயிருக்கின்றான். அவன் ஏந்தியிருக்கும் வாளோ பகைமறவரின் தலைகள் வெட்டுண்டு வீழ்ச் சுழன்று கொண்டிருக்கும். அந்தக் களத்திலே, என் மகன் பகைவரது வாள்வாய்பட்டுச் சாவினால் தழுவப்பட்டான் என்றால், அதுவே எனக்குத் தருமமும் கருமமும் ஆகும்.”

இந்த மூதாட்டியின் நெஞ்சத்திலே நிறைந்திருக்கின்ற உரிமை வேட்கையைப் பாருங்கள்! களத்திற்குச் சென்று தன் மகன் உயிரோடு பிழைத்துவர வேண்டுமே என்று கூட அவள் கவலைப்படவில்லை. பகை மறவரை வெட்டிக் குவித்து, அவன் தானும் களத்திலே வீழ்ந்துபட்டால், அதுவே தனக்கு எல்லாப் பேறும் வாய்த்ததுபோல என்கின்றாள்!

40. அச்சம் பயந்ததே!

வீரர்கள் தாம் களத்திடையே சென்று கடுமையாகப் போரிடுதலையும், அங்ங்னம் பகைவரோடு இடுகின்ற போரிடத்தே, பட்டுவீழ்தலையும் தமக்குச் சிறப்புத் தருவதாகவே கொண்டிருந்தனர். வீரனைப் பெற்ற தாயுங்கூடத் தன் மகனைக் களத்துக்கு உவகையுடன் அனுப்பி இன்புறுகின்றனள்.

எனினும், களத்தையும், களப்போரையும் விருப்புடன் வரவேற்காது மயங்குவோரும் சிலர் அந்நாளில் இல்லாமல் இல்லை. அவர்கள்தாம் களவீரரின் காதன் மனைவியர் ஆவர்.

தம் கணவன்மாரோடு உயிரற ஒன்றிக் கலந்த உழுவலன்பினை உடையவர் அவராதலின், அவர்களால் தம் கணவன்மாரை இழந்து விடுகின்ற கைம்மை நிலையினை ஏற்றிருப்பதென்பதும் இயலாதாகிறது. அவர்கள், அந்தத் துயரினைத் தாளாதவராகின்றனர். களத்திற்குச் சென்று வேல்பட்டு வீழ்ந்து கிடக்கும் தம் கணவனைக் காண்கின்றனர். அந்த வேலைப் பறித்து நாற்றி, அதன்பால் தாமும் வீழ்ந்து தம் உயிரையும் தம் கணவரது உயிரோடு ஒன்று சேர்த்து விடுகின்றனர். -

இப்படிப்பட்ட ஒரு சிறந்த காதலன்புடையவளைக் காட்டுகின்ற செய்யுள் இதுவாகும். அந்தத் தலைவியின் தியாகம் நம்மை சிந்திக்கச் சிந்திக்கப் பெருமிதங் கொள்ளுமாறு தூண்டுகின்றது! - -