100
தகடூர் யாத்திரை
இன்ப முடம்புகொண் டெய்துவீர் காண்மினோ அன்பி னுயிர்மறக்கும் ஆரணங்கு - தன்கணவன் அல்லாமை உட்கொள்ளும் அச்சம் பயந்ததே புல்லார்வேல் மெய்சிதைத்த புண். (ഗ്ഗഴ്സ്. ീി) "பகைவருடைய வேற்படை அந்த வீரனின் உடலினைச் சிதைத்துப் புண்படுத்திற்று. அந்தப் புண்ணினைக் காணக்காண அவள் உள்ளம் பேதலித்தது. தன் கணவன் தன்னருகே இல்லாமற்போவதான நிலையினை உள்ளத்தே கொள்ளவும் அவளால் இயலவில்லை. அதனால், அவள் பால் அச்சம் தோன்றிற்று. அவனின்றித் தான் தனிப்பதோ என்ற தனிமை நினைவின் அச்சம் அவளுடைய உள்ளத்தைப் பெரிதும் வாட்டிற்று.
“தன் உடம்பினை நோக்கினாள். அவன் தன்னைத் தழுவிக் கலந்து தந்த இன்பத்தின் தகைமையை நோக்கினாள். அவள் உள்ளம் ஆன்றோர் வாக்கு ஒன்றை நினைவிற் கொண்டது.
"அன்பின் மிகுதியால், களத்தே பட்டு வீழ்ந்த தம் கணவனைக் கண்டதும், அவனைப் புண்படுத்திய அந்த வேலிலேயே தாமும் வீழ்ந்து மடிகின்ற பெண்கள் பேரின்ப நலத்தைத் தம்முடைய உடம்பினைத் துறத்தலைக் கொண்டு அடைவார்கள். -
"இந்நினைவு எழுந்ததும், அவள் கணப்போதும் தாமதிக்க வில்லை. அந்த வேலின்பால் வீழ்ந்து அந்நிலையே தானும் உயிர் நீத்தாள்.
அவளுடைய நிலையைக் கண்டவர் வியந்தனர். அவளுடைய தெய்வக் கற்பின் சீர்மையை நினைத்தனர். தாமும் மெய்ம்மறந்து அவளைப் போற்றினர்.” - - இங்ங்னம் மறவர்களின் மனைவியர், தாமும் மறக் கற்பினால் மாண்புற்றுத் திகழ்ந்த செவ்வியையும் உடையவரா யிருந்தனர். தகடுர் நாட்டின் இந்த மேதகுபண்பின் செழுமை யினை நினைக்கும் போதெல்லாம், நாமும் அந்தத் திருநாட்டை நினைந்து நினைந்து பூரிப்படைகின்றோம். - இந்தச் செய்யுளை நச்சினார்க்கினியர் மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும் என்னும் சூத்திர உரைக் கண் காட்டுவர்.
41. கழலின் திண் காய்!
தகடுர் நாட்டு மறவர்களின் மாண்புகளை நாம் மீண்டும் மீண்டும் நினைக்கநினைக்க, நம் கண் முன்னர், தமிழரின் வீரமரபு