பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

தகடூர் யாத்திரை


"கண்கள் கணைக் கூட்டதே மூழ்கிக் கிடக்கின்றன. தலையோ, அழகிய மாலை விளங்கும் கழுத்திடத்தே வாளால் வெட்டப்பட்டுச் சிதைந்து போய்க் கிடக்கின்றது.

"வாயோ, பொருதும் முனையையுடைய அம்புகள் மூழ்கிக்

கிடத்தலினால், புலால் வழிந்ததாகி, அம்புக் கூட்டைப் போன்று, ஒரு நாழிகை நேரம் வந்து தைத்த அப்புகளின் செறிவோடு விளங்குகின்றது. -

"நெஞ்சமோ கொடிய கணைகள் பாய்ந்து துளைபட்டுத் தோன்றுகிறது. துடைகளோ தம்முடைய நிறத்தையும் மறைத்துகிடக்கும் பலவான கணைகளால் நிறைந்தனவாக விளங்குகின்றன. - -

“அதனால், கட்டவிழ்ந்த பூவினைப் போன்று அம்புகள் செறிந்த பஞ்சணையிடத்தே கிடந்த இந்தக் காளையைக்கண்டு, இவன் என் மகனென எங்ங்ணம் யான் அறிவேனோ?

"அழகுடன் கவிழ்ந்து விளங்கும் சுழற்சியின் திண்ணிய காயைப் போன்று. இவன் உடல் தோன்றுகின்றதே"

எற்கண் டறிகோ? எற்கண் டறிகோ? என்மகன் ஆதல் எற்கண் டறிகோ? கண்ணே, கணைமூழ் கினவே; தலையே, வண்ண மாலை வாள்விடக் குறைந்தன; வாயே,பொருநுனைப் பகழி மூழ்கலிற் புலால் வழிந்து ஆவ நாழிகை யம்புசெறித் தற்றே: நெஞ்சே, வெஞ்சரங் கடந்தன; குறங்கே நிறங்கரந்து பல்சரம் நிறைந்தன வதனால் அவிழ்பூ வம்பணைக் கிடந்த காளை ... " கவிழ்பூங் கழற்றின் காய்போன் றனனே! (புறத். 405)

இங்ங்னம் கதறிய தாய், தன் மகனைக் கண்ட அந்தக் காட்சியினாலே தன் உள்ளம் வெதும்ப, அந்நிலையே வீழ்ந்து 'உயிர் நீத்தனள். இதனை, இத் தகடூர் யாத்திரைச் செய்யுளைத் துறக்கத்துப் பெயர்ந்த நெடுங்கோளாதன் தாய் இறந்துபட்ட தலைப் பெயனிலை என்று குறித்துப் போற்றுவர் நச்சினார்க்கினியர். - -- -

42. கல்லாக் காளை! ஒரு வீரன் போர்க்களத்திலிருந்து Gummi இடையிலே

வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டான் என்றால், அவன் அப்படித் திரும்பி வந்ததை நினைந்து, அவனைப் பெற்றவள் எப்படி