பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

105


- ೨/೧/T அரண்மனையிடத்தே பெண்கள் அழுது புலம்புகின்றனர். வேல்போன்ற கண்ணினரான அவர்களுடைய கொடிய பூசலின் ஒலியோ மிகவும் கடுமையாக எழுகின்றது. அந்த ஒலியைக் கேட்டுப்புலவரின் உள்ளமும், அதிகனின் பிரிவை நினைத்து புலம்புதலைத் தொடங்குகின்றது. -

அப்போதும் துடிப்பறை ஒலிக்கிறது: அது எஞ்சியவர் செய்யும் போர்ப்பறை ஒலி!

புலவர் வருந்துகின்றார். புரவலன் மாய்ந்த போதும் இந்தப் போர்த்துடி முழங்கவேண்டுமா? வேற்கண்கள் அழுது புலம்புகின்றன. அதனைக் கேட்டுப் பொங்கும் இத்துடி என்றால், அது, அதன் தோற்கண்ணாகிய தன்மையாற் போலும்' என இரங்குகின்றார். - - - இரவலர் வம்மின் எனவிசைத்த லின்றிப் புரவலன் மாய்ந்துழியும் பொங்கும் - உரையழுங்க வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா தோற்கண்ண போலுந் துடி. (புறத் , 437)

இச் செய்யுளை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் மேற்கோள் காட்டுவார். -

44. அணியில் புகழ்! - தகடூர்ப் போரிலே அதிகமான் வீழ்ந்த செய்தி தமிழகமெங்கணும் விரைவிலே பரவியது. சேரமானை வெற்றிக்காகப் பாராட்டுவோரினுங் காட்டிலும், தகடுர் அதிகமானின் வீழ்ச்சிக்கு வருந்துவோரே அதிகமாயினர். அப்படி வருந்துகின்ற ஒருவரின் கூற்று இது

"இழும் என முழங்குகின்ற வெற்றி முரசத்துடனே கூடிவந்த பகைவர்களின் படைமறவர்கள் முற்றுகையிடத் தன் பழைமையான ஊராகிய தகடுர் என்னும் சிறையிடத்தே இத்துணைநாள் அடைபட்டுக் கிடந்தான் அதிகமான். - “அதனை ஊடறுத்து வெளிவந்து, களத்திலே பகைவரது குருதியாற் சிவந்த வேலினை ஏந்தியவனாக, அவன் ஆற்றிய போராண்மை வீர விளக்கமாகி நிலைபெற்றது. அங்கே, அவனும் இறுதியிற் களத்திலே பட்டனன். - -

“எவ்விடத்தே அவன் வீழ்ந்து பட்டனன்? “அவன் மிகவும் பெரிய தலைமையாளன்! “அவன் பட்டது தகடுர்க் களத்தில் ஆனால் அவன் புகழோ பெரும்புகழ்! அது இவ்விடத்தும் நின்று நிலவுகிறதே! அது