பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

தகடூர் யாத்திரை


அவனின் வீழ்ச்சியைக் குறிக்கிற அழகற்ற புகழ்தான் என்றாலும் அது களத்தில் வீழ்ந்த பெரும் புகழ்! அதனை யாமும் போற்றுவோம்! - -

இழுமென முழங்கும் முரசமொடு குழுமிய ஒன்னார் மள்ளர்த் தந்த முன்னுர்ச் சிறையில் விலங்கிச் செவ்வேல் ஏந்தி யாண்டுப்பட் டனனே நெடுந்தகை - ஈண்டுநின் றம்ம வணியில்பெரும் புகழே! (புறத் 433)

என்றோ எங்கே அதிகமான் இறந்தான்! அவன் புகழ் அவனுடன் இறக்கவில்லை! அது இங்கும், தமிழகம் எங்கும் நிலவுகிறது! அழியாத பெரும்புகழ் பெற்று விட்டான் அதிகன்! தோல்வியிலும் அவன் கண்டது வெற்றியே வீழ்ச்சியிலும் அவன் பெற்றது உயர்ச்சியே! -

45. தாயின் கனவு அதிகமான் தன்னுடைய கோட்டையைக் காத்தவாறு உள்ளிருந்தபடியே நெடுங்காலம் சேரரது படைகளின் தாக்குதலைச் சமாளித்து விட்டான். என்றாலும் சேரரின் பெரும்படைக்கு முன்னால் அவனது வீழ்ச்சி உறுதியாகிக் கொண்டே வந்தது. அங்ங்னம் அடைத்திருந்து, அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சோழப் படையும் வந்து சேரவில்லை. இறுதியில், மறுநாட் காலை தான் கோட்டையை விட்டு வெளிப்போந்து, போரின்கண் ஈடுபடப் போவதாக அவன் முடிவு செய்துவிட்டான். அவன் தாய்க்கு அன்றிரவு சரியான தூக்கமே இல்லை. தீய கனவுகள் பல அடுத்தடுத்துக் தோன்றின. அவள் கவலையோடும் கண்ணிரோடும் இரவை நீந்திக்கடக்க முயன்று கொண்டிருந்தாள். - - -

மறுநாள் களத்திலே அதிகமானும் வீழ்ந்து பட்டனன். அவள் தான் கண்ட கனவைச் சொல்லிப் புலம்புகின்றாள். கேட்கும் தமிழ்ச் சான்றோரின் கண்கள் கலங்குகின்றன. அவளுடைய அந்தப் புலம்பலை நினைந்து பாடிக் கசிகின்றார் அவர். - -

"கனவு போலவும் இருந்தது; நனவு போலவும் இருந்தது கண்ட அந்தக் காட்சி. - - “யான் நினைத்ததும் அல்லாமல், என் உள்ளத்து உள்ளும் நடுக்கமுறும்படியாக அந்தக் காட்சி தோன்றியது.