பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

107


"கருநிறக் காக்கையும் வெண்ணிறக் கூகையும், இரு வகையான உயர்திணைகட்கு அடையாளமாக எழுதப்பட்டு உயர்ந்த கொடிகளோடும், அச்சந்தரத்தக்க தோற்றம் உடைய உருவைக் கொண்டனவாகப் பலப் பல கூளிக் கண்களும், இரத்தஞ் சிந்தும் தலைகளாகிய உண்கலங்களைச் சுமந்தவை களாகக் களிப்புடன் ஆடிக் கொண்டிருக்கக் கண்டேன்!

"பறையினைப் போல விளங்கும் விளித்த கண்களை உடையவள்; பிறையினைப் போல விளங்கும் பெரிதான கோரைப் பற்களை உடையவள்; குன்றுகளைப் போலத் தோன்றும் பெருத்த முலைகளை உடையவள் இடையினையும் மறைத்த பெரிதான வயிற்றைக் கொண்டவள்; இடி முழக்கைப் போன்ற பெரிதான குரலினைப் பெற்றவள் தடித்த வாயினையுடையவள் தசைகள் தொங்குகின்ற முதுகினைக் கொண்டவள்; கடலைப்போல விளங்கும் கருநிற மேனியினள், காண்பதற்கு இன்னாததும் பிணநாற்றம் உடையதுமான மண்டையோட்டு மாலையினை அணிந்தவள்; வில்லைப் போன்ற புருவத்தாள்; அகன்று உயர்ந்து பரந்த அல்குலை உடையவள்; கார் மேகமும், வெண் மேகமும் காற்றும் போலச் செல்லும் விரைந்த செலவினைக் கொண்டவள்; ஒரு பெண்ணினைக் கண்டேன் (இவள் காளி).

"இவள் தன் தலையை விரித்துக் கொண்டு, அகன்ற தன் கையினைத் தொங்க விட்டவளாகப் போர்க் களத்திலே உலவினள். மறமாண்புகளை அழித்து, தம்முள் மாறுபாடு கொண்டறியாத அறிவினையுடைய சிறந்த தாயாகிய நின் அறிவுக்கு இந்த முறை நான் காட்டுவது இவ்வளவே என்று அறிவிப்பவளைப் போலத், தன் பூவிரலைக் காட்டி அவள் உலா வந்தனள். புழுதி எழும்படியாகத் தன் கைகளால் நிலத்தே அறைந்து ஆர்ப்பரிக்கின்றனள். தகடுராகிய இந்தவூரையே தான் இடம் வலமாக அப்படிச் சுற்றி வந்தனள். பின்னர் தன் வாழிடமாகிய காட்டினைச் சென்றும் சேர்ந்தனள்,

- இத்தகைய ஒரு காட்சியை யான் கண்டேன் என்று

சொல்லும் கவலையினாலே மேற்பட்ட நெஞ்சத்துடனே, துயரக்

கடலிடையே நீந்தியிருந்தனள் அதிகமானின் தாய்! அன்றிரவு

அவளது நிலைமை அங்ங்னத்தான் இருந்தது." கனவே போலவும் நனவே போலவும் முன்னிய தன்றியென் னுள்ளகம் நடுங்குறக் கருநிறக் காக்கையும் வெண்ணிறக் கூகையும் இருவகை உயர்திணைக் கேந்திய கொடியொடும்