பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

109


“சேரமானே! மெய்யான ஆற்றல் நிறைந்த மனத்தினனாக, நம்முடைய எதிரே தகடுர்ப் படையினை நடத்தி நிற்பவன் பெரும்பாக்கன் என்பவன் அவனை நீ அறியமாட்டாய்.

“தகட்டால் பொதியப்பெற்ற செய்வினைத் திறனால் அழகுற்றுத் தோன்றிச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தேராகிய வண்டியினின்றும், கைகடந்து சீறி வரும், தைத்த தலை யாட்டத்தையுடைய குதிரையின் மேலாகத், தளையவிழ்ந்த கண்ணியினைச் சூடியவனாக வருகின்ற இளையோனாகிய, இந்தப் பெரும்பாக்கனை எளிதாக நினைத்தல் வேண்டாம்!

“இவன் சீறினால், வானளவு உயர்ந்த நெடிய மலையிடத்தே வந்து படியும் கார்மேகத்தைப் போலத் தோன்றுவதும் குளிர்ந்த நறுநாற்றத்தைக் கொண்ட மதநீரினை ஒழுக்கிக் கொண்டிருப்பதும், வெண்மையான கொம்புகளை உடையதும், தலைமையுடையதுமான, நம் போர்க் களிற்றை வெட்டிக்' கொல்லுதலையும் செய்யக் கூடியவன். - -

“இவன் தன் வீரத்தால் உடலெல்லாம் பூரிக்கும் உள்ளக் களிப்புடன் திகழ்பவன். அப்பக்கமாக அவன் வருகிறான். கடிப்பினையுடைய கள்ளினை உண்ணும் செய்வினையில் வல்ல தோற்றத்தையுடைய துடியனே! நீ எறிகின்ற நுண்ணிய துடியின் கண்ணினை நோக்கிச் சிறிய கொலை மொழியினை, மின்னல் சிதறுவது போலக் கூறியவனாகச் சொல்லிவந்து, தன் வேலினைச் சுழற்றியிட்டு நின்னைக்கொன்று, அந்த வெற்றியால் நகைத்துத் திரிகின்ற தன்மையினையும் உடையவன் அவன்!

அரிசில்கிழார் சேரமானுக்கு இப்படிச் சொல்ல, அவனும் தன் துடியனுடன், முனைப் படையினின்றும் அகன்று, காவலான பின்னணிப் படையுள் செல்கின்றனன்.

மெய்ம்மலி மனத்தில் நம்மெதிர் நின்றோன் அடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற் கையிகந் தமருந் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின் விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறும் கடாஅம் உமிழ்ந்த வெண்கோடு அண்ணல் யானை யெறித லொன்றோ மெய்ம்மலி யுவகையன் அம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடிய நுண்கண் நோக்கிச் சிதறிய கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையதன் வேல்திரித் திட்டு நகுதலும் நகுமே!

(தொல்காப்பியப் புறத்திணை இயலின்கண் - நச்சினார்க்கினியர் காட்டும் மேற்கோள்)