பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தகடூர் யாத்திரை



3. பெருஞ்சேரல் இரும்பொறை

அந்துவஞ் சேரல் இரும்பொறைக்குக் பொறையன் தேவிபால் பிறந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவன். இவன் தன் காலத்தில் பேராற்றலுடன் விளங்கியவன் ஆவான். சேரரது ஆட்சி கொங்குநாட்டுப் பகுதிக்கண் கால் கொள்வதற்கான உறுதிப்பாட்டை மேற்கொண்டவன் இவனே எனலாம்.

இவனது சிறப்பினைப் பாடிய புலவர் கபிலர் பெருமான் ஆவார். பதிற்றுப்பத்துள் ஏழாம் பத்தாக அது அமைந்து இவனது பெரும்புகழை அழியாது நிலை பெறுத்துகின்றது.

பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ
நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணங்கமழ் அகலம்
மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே
நிலத்திறம் பெயருங் காலை யாயினும்
கிளந்த சொல்நீ பொய்ப்பறி யலையே

(பதிற்று, 7-3)


என்னும் கபிலர் வாக்கு இவனது சிறந்த பல இயல்புகளையும் விளக்கி, இவனுடைய பெருமிதச் செவ்வியினை உரைப்பதாக இலங்குகின்றது. குண்டுகட் பாலியாதனார் என்பாரும் இவனைப் பாடிப் போற்றியுள்ளனர்.

இவனுடைய வெற்றிச் செயல்களுன் குடநாட்டிற்புகுந்து குறும்பு செய்த சத கன்னர வேந்தனை வென்று அவன் குறும்பினை அடங்கியதும், மற்றும் தன் ஆணைக்கு அடங்காது ஒழுகிய குறுநில வேந்தர்களை ஒடுக்கியதும் சிறப்புடையன. முடிவில், சிங்கற்பள்ளி என்னுமிடத்தே நடந்த பெரும்போரில் இவன் இறந்தான். இருபத்தைந்தாண்டுகள் அரசுவீற்றிருந்து தமிழும் அறமும் செவ்விதாகத் திகழ விளங்கிய இவனது மறைவிற்குப் பின்னர் அரசு கட்டில் ஏறியவன் பெருஞ்சேரல் இரும்பொறை என்பான் ஆவான்.

செல்வக் கடுங்கோவுக்கும் வேளாவிக்கோமான் பதுமன் தேவி என்பாளுக்கும் பிறந்தவன் இவன். 'பதுமன் தேவி' என்பதனைப் பதுமனின் மகள் என்றே பொருள் கொள்ளல் வேண்டும். பதுமனின் மகள் ஒருத்தி இமயவரம்பன்