உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

27


ஒளவையாரின் சொற்கள் அதிகனின் உள்ளத்திலே பெருமிதத்தை ஊட்டுகின்றன. இப் பகையினை ஒழிப்பேன்’ என்று சினந்து எழுகின்றான். போர் ஒலிக்கப் பெரும்படை திரள்கின்றது. பகைவர் தன் நாட்டை அடைவதற்கு முன்பாகத், தானே அவர் அரண்களைச் சென்று வளைத்துக் கைப்பற்றி வெற்றிவாகை சூடுகின்றான் அதிகன். இவனது இந்தப் போர் வெற்றியை, -

"கடிமதில் அரண்பல கட்ந்த - - நெடுமான் அஞ்சி' - (புறம் -92) திண்பிணி முரசம் இழுமென முழங்கச் சென்றமர் கடத்தல் யாவது வந்தோர் தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு ஒடன் மரீஇய பீடின் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழிஇக் காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த - நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்கென வாள்போழ்ந் தடக்கலும் உய்ந்தனர் மாதோ வரிஞ்மி றார்க்கும் வாய்புகு கடாஅத் தண்ணல் யானை அடுகளத் தொழிய அருஞ்சமந் ததைய நூறிநீ - பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே. (புறம் -93) என்று ஒளவையார் கூறுகின்றார். இப் போரின்கண் அதிகமான் புண்பட்டான் என்பதும், இதனால் அறியப் படுவதாகும். இந்தப் போரினை,

எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம் வழுவின் றெய்தியும் அமையாய் செருவேட்டு இமிழ்குரல் முரசின் எழுவரோடு முரணிச் சென்றமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க் கரியை.............. (புறம் -99) எனக் கூறுகின்றது ஒளவையாரின் புறப்பாட்டு, இதேபாட்டின் கண், அவன் மலையமானை வென்று கோவலூரைக் கைப்பற்றிச் சிறந்ததும், முரண்மிகு கோவலூர் நூறிநின், அரணடு திகிரி ஏந்திய தோளே என உரைக்கப்படுகின்றது. - மேலும், போர்க் குரைஇப் புகன்று கழித்த வாள்' எனவரும் புறப்பாட்டில் (97) பகைவரை அதிகனுக்குத் திறையழித்துப் பணிவீராக என, ஒளவையார் கூறுவதும், முனைத்தெவ்வர்