பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

தகடூர் யாத்திரை


முரணவிய' என அவனது பிறர் அரண்களை வென்ற செவ்வியைப் பாராட்டுவதும் இங்கு நினைவு கூரத் தக்கதாகும். இங்ங்னம், போர்மறத்தால் சிறப்பெய்தி விளங்கியவன் அதிகமான் அவன், இடையறாது இங்கனம் இயற்றிவந்த போர்ச் செயல்களுள் பெரும்பாலும் வெற்றி அவனுக்கே வாய்த்தும் வந்தது. அவனுக்குத் தவமகன் பிறந்தபோதும் அவன் போர்க் களத்திலிருந்து நேராக வந்துதான் தன் மகனைக் காண்கின்றான். இதனை ஒளவையாரின் பாடலால் நாம் அறியலாம்.

கையது வேலே காலன புனைகழல் மெய்யது வியரே மிடற்றது பசும்புண் வட்கர் போகிய வளரிளம் போந்தை உச்சிக் கொண்ட ஊசி வெண்டோடு வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச் சுரியிரும் பித்தை பொலியச் சூடி வரிவயம் பொருத வயக்களிறு போல இன்னும் மாறாது சினனே அன்னோ உய்ந்தனர் அல்லர்.இவன் உடற்றி யோரே செறுவர் நோக்கிய கண்டன் . - சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே. (புறம்-100) தனக்குப் பிறந்த தவமகனின் முகத்தினைக் காணும் போதுகூட, அதிகமானின் முகத்திலே மகிழ்ச்சி தோன்றவில்லை; போர்க்களத்திலிருந்து தான் பெற்ற பசும்புண்ணுடன் வந்துநின்ற அவன் கண்களின் சினத்தோற்றம் மாறவில்லை. சிறுவனை நோக்கியுஞ் சிவப்பானாவே' என வருந்தும் ஒளவையார், அதே நேரத்தில் அதிகனின் வலிமையையும் நினைந்து, உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றியோரே என்றும் பாடுகின்றார்.

முனைகூட வெழுந்த மங்குன் மாப்புகை மலைசூழ் மஞ்சின் மழகளிறு அணியும் பகைப்புலத் தோனே பல்வேல் அஞ்சி (புறம் -703)

என உரைக்கும் புறப்பாட்டடிகள், இவன் இடையறாது போரின்கண் ஈடுபட்டு விளங்கியிருந்தனன் என்பதனையே நமக்குக் காட்டுவனவாகும். எனினும், பகையழிப்பதில் அத்தகைய சினமுடன் கொதித்தெழுகின்ற இயல்பினன் ஆயினும், தன்னை வந்து இரந்துநின்ற இரவலர்க்கும் பாடி வந்த பரிசிலர்க்கும் வரையாது வழங்கிய வள்ளியோனாகவும் அதிகமான் விளங்கிவந்தனன். . . -

அலத்தற் காலை யாயினும் -

புரத்தல் வல்லன் வாழ்கவன் தாளே! (புறம் 164)