பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

29


'உலகமே பஞ்சத்தால் வருந்தி வாடிக்கிடக்கின்ற ஒருந் தாயக் காலத்தினுங்கூடத் தன்னை வந்தடைந்த வறியவரைப் புரத்தற்கு வல்லன் என்கின்றனர் ஒளவையார். அவனுடைய இருநிலை உள்ளத்தின் ஏற்றத்தை இச்செய்யுளால் நாம் அறியலாம்.

அஞ்சியின் இந்தப் போர்வெறிக்கு யாது காரணம்? அந்நாளிலே சிதறுண்டுகிடந்த சிறுசிறு நிலப்பகுதிகளும், அவற்றையாண்ட குறுநில வேந்தரும், அமைதி பேணி வாழ்வதைக் காட்டினும் போர் மறத்தால் வாழ்வதையே தம்முடைய குறிக்கோளாகவும் தம்முடைய இயல்பாகவும் கொண்டிருந்தனர். அதிகமான் இளம்பருவத்திலேயே இவர்களுட் பலரின் பகைமைக்கு இலக்காகி விட்டான். 'இளைஞன், இவனை அழித்துவிடுதல் எளிது’ எனக் கருதிப் பகைவர் சூழ்ந்ததும், அவரை இவன் எதிர்த்து நின்று போரிட்டதும், இவன்பால் திண்ணிய போர் வெறியைக் கிளர்ந்தெழச் செய்திருத்தல் வேண்டும்.

வயதால் இளைஞனாயினும், பயிற்சியாலும், வலிமை யாலும், போர்க்கலைத் தேர்ச்சியினாலும் அதிகமான் சிறந்தே விளங்கியிருந்தனன். இதனை உரைக்கும் ஒளவையார்.

போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலக்கும் நாட்படு சின்னிக் களிறட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் காரஅத் தன்ன வென்னை - நுண்பல் கருமம் நினையாது - - இளையனென்று இகழிற் பெறலரிது ஆடே. (புறம்-104) என்று, அவன் படைஞருக்கு உரைக்கின்றனர். பகைவர் பலரும், தம் மன்னன் இளையன் என்று கருதி வந்து சூழ்கின்றனர்; படைமறவர் பலரும் அங்ங்னமே கருதுகின்றனர்; இதனால் அவரைக் கவலை சூழ்கின்றது; “இவன் நமக்கு வெற்றித் தேடித் தருவானோ?” என்று கவலை கொள்ளுகின்றனர். அவர்களது எண்ணத்தை மாற்றுமுகத்தான் 'இவனை இளையவன் என்று உருவை நோக்கிக் கருதிச் சோர்ந்துவிடாதீர்; இவனுடைய நுண்ணிய பல கருமத்தையும் நினையுங்கள்; இவன் வன்மை உங்கட்குப் புலப்படும்; அந்த நினைவோடு பகைவரை எதிர்த்துநின்றால் வெற்றியும் உங்கட்கே யாகும்’ என்று ஒளவையார் கூறுகின்றனர்.

அதிகமானின் போர்வன்மை பெரிது என்பதற்கு இவ்வாறு பற்பல செய்யுட்களும் சான்று பகர்ந்து நிற்கின்றன. இடையறாது போரின்கண் ஈடுபட்ட இவனது செயலது சிறப்பினை மற்றொரு சமயம் ஒளவையார் மிகவும் தெளிவாகவே கூறிப் போற்றுகின்றார். -