பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

தகடூர் யாத்திரை


தொண்டைமான் அதிகன்மீது பகைகொண்டு அவனை ஒழிப்பது கருதிப் படைதிரட்டி இருந்தான். இதனையறிந்த ஒளவையார் அவனுக்கு அறிவுகொளுத்துதலைக் கருதினவராக, அவன் பாற் செல்லுகின்றார். - - அவரது புலமைக்கு மதிப்பளித்து அவரை வரவேற்றுப் போற்றினாலும், தொண்டைமானின் உள்ளத்திலே அவர் அதிகமானுக்கு வேண்டியவர் என்ற நினைவும் நிரம்பியே இருந்தது. தன்னைப் பகைத்தால் அதிகன் அழிவெய்துதல் உறுதியென்பதை அறிவிக்க நினைக்கின்றான் அவன். ஒளவையாரை அழைத்துச் சென்று தனது படைக்கலக் கொட்டிலைக் காட்டுகின்றான். அவனது எண்ணத்தைப் புரிந்துகொண்டனர் ஒளவையார். "தொண்டைமானே! நின் படைக்கலங்கள் மிகமிக அழகியன பீலி அணியப்பட்டு, மாலை சூடப்பட்டு, உடலிடம் திரண்ட அழகிய காம்பை அழகுபடச் செய்யப்பட்டு, நெய்யிடப்பட்டுக், காவலையுடைய அகன்ற அரண்மனை யிடத்தாக உள்ளன. - - "ஆனால், அதிகமானின் படைக்கலங்களைப் பற்றி நீ அறியமாட்டாய். அவைதாம் பகைவரைக் குத்துதலால் தம் கங்கும் நுனியும் சிதைந்தவையாய்க், கொல்லனது பணிக்களரி யாகிய குறிய கொட்டிலிடத்தனவாகவே எந்நாளும் விளங்குகின்றன. - - “செல்வம் உண்டாயின் உணவுகொடுத்தும், இல்லை யானால் உள்ளதனைப் பலரோடும் பகுத்துண்டும், வறியோ ருடைய சுற்றத்திற்குத் தலைவனாகியவன் எம்முடைய வேந்தன். அவனுடைய கூரிய நுனியுடைய வேலின் தகைமை இதுதான்.” ஒளவையாரின் சொற்கள் தொண்டைமானைச் சிந்திக்கத் தூண்டுகின்றன, தன் போர்முயற்சி பலன் தராது என்று உணர்வதற்கு அவனுக்கு நெடுநேரம் பிடிக்கவில்லை. ஒளவையாரின் சொற்கள் உண்மையானவை என உணர்ந்த அவன், அந்நிலையே தன் படையெழுச்சிக் கருத்தினைக் கைவிட்டுவிடுகின்றான். அதிகனோடு நட்புக்கொள்ள நினைக்கின்றான். அதற்கு ஒளவையாரே உதவுகின்றனர். இந்தச் செய்தியைக் கூறும் ஒளவையார், - இவ்வே, பீலியணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து கடியுடை வியனகர் அவ்வே, அவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து