பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

31


கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும் உண்டாயிற் பதங் கொடுத்து இல்லாயின் உடனுண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணலெங் கோமகன் வைந்நுதி வேலே.

- என்கின்றனர்.

ஒளவையார்பால் அதிகனுக்கிருந்த அன்பின் எல்லையைக் காட்டுவது, அவன் அரிதிற்பெற்றதும் நெடுநாள் வாழச் செய்வதுமான நெல்லிக்கனியைத் தானுண்ணாதும், அதனைத் தருங்கால் உண்மையுனரின் ஒளவையார் ஏற்கார் எனக் கருதியும், அதனை முதற்கண் அவருக்கு உண்ணக் கொடுத்து, அவர் உண்டதன் பின்னரே அது பற்றிய சிறப்பினைக் கூறி அவரைத் திகைப்படையச் செய்த பெருஞ்செயல் ஆகும். - -

இதனை வியந்து போற்றும் ஒளவையார் :

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை ஆர்கலி நறவின் அதியர் கோமான் போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற் றொருவன் போல * மன்னுக பெரும நீயே! தொன்னிலைப் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா தாத னின்னகத் தடக்கிச் - சாதல் நீங்க எமக்கீந்தனையே (புறம்-9)

என வாய்குளிர வாழ்த்திப் பாடுகின்றனர்.

இங்ங்னமாகப் பெரும்புகழுடன் திகழ்ந்த அதிகமான், சேரரின், அதுவும் தன் குடியினரின் பொறாமைக்கும் பகைமைக் கும் உள்ளானதில் வியப்பேதும் இல்லை. சேரரின் நேர்குடியின னான இரும்பொறை தன்னுடைய மேலாட்சியை அதிகன் ஏற்கவேண்டும் எனக் கருதியதும், அதிகன் அதற்கிசையாது தன் நாட்டைக் காத்துநின்று உயிர்விட்டதும், தமிழக வரலாற்றில் ஒரு வருந்தத்தக்க நிகழ்ச்சியாகும். போர்மறத்தின் மாண்பினாலே செம்மாந்து நின்ற தமிழ்வேந்தர்கள், தம்முள் தாமே போரிட்டு மாய்ந்த நிலைமையை நினைக்கும்போது, உண்மையாகவே நாம் வருந்தாமலிருக்க இயலவில்லை.

(புறம்-95