பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தகடூர் யாத்திரை



இந்திய வரலாற்றின்கண், இதேபோன்று நாம் காணும் மற்றோர் இனத்தவரான இராசபுத்திரர்களையும் இவ்விடத்தில் நினைவு கூர்தல் வேண்டும். ஒரு நாட்டின் நிரந்தரமான புகழுக்கு இத்தகைய உள்நாட்டுப் பூசல்கள் எத்துணை இழுக்கினைத் தந்துவிடுகின்றன என்பதற்கு இராசபுத்திரரின் வீழ்ச்சி நல்ல சான்றாக எடுத்துக் காட்டப்படும். அதே நிலையில்தான், தமிழகத்தவரின் மறமாண்பினையும் நாம் கருதி வருந்தி அமையவேண்டியதாக இருக்கின்றது.

பெரும்புகழால் சிறப்புற்ற குதிரைமலைக் கோமானான அதிகமானுக்குச் சேலம் மாவட்டத்தே சிறந்ததொரு நினைவுச் சின்னம் ஏற்படவேண்டும். அதன் கண் அதிகனின் ஆற்றலும், அவன் அழிதற்குக் காரணமாகிய தகடூர்ப் பெரும்போரது குறிப்பும் பொறிக்கப்படல் வேண்டும். தமிழகத்தே ஒற்றுமை நிலவுதல் வேண்டும். தமிழர் ஒருவர்க்கொருவர் பகைமையும் காழ்ப்புங் கொண்டு மோதிக் கொண்டால், அது தமிழினத்தின் கேட்டுக்கே காரணமாகும் என்ற சிறந்த உண்மையினை என்றும் விளக்கிக் கூறும் சிறந்த நினைவுச் சின்னமாக அது விளங்கும்.

'கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி நல்லிசை நிறுத்த நயம்வரு பனுவல் தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன் எண்ணுமுறை நிறுத்த பண்ணின் உள்ளும் - புதுவது புனைந்த திறத்தினும்: (அகம் - 362) என வரும் அஞ்சியத்தைமகள் நாகையாரது வாக்கும், நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி கடுமுனை அலைந்த கொடுவில் ஆடவர் ஆடுகொள் பூசலின் பாடுசிறந்து எறியும் பெருந்துடி’ - (அகம் -32) என வரும் பரணரின் வாக்கும், அதிகனின் பெருமைக்கும் மேலும் சான்று பகர்வனவாகும். - - XXXXXX