பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

தகடூர் யாத்திரை


எனக் கூறுகின்ற இவரது சால்பினை நினைத்தால், இவரது செழுந்தமிழ்ச் சால்பினது சிறப்பும் புலனாகும்.

பெருஞ்சேரல் இரும்பொறைபால் அன்புற்று அவனுடன் இருந்தவர் எனினும், அதிகமானின் வீழ்ச்சியை எண்ணி வருந்திப் பாடிய இவரது செய்யுள், தமிழ்ச் சான்றோரின் உளமாண்பைக் காட்டும் தகைசிறந்த உயிரோவியம் ஆகும்.

விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல் வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாட் பொய்யா எழினி’ - எனவுரைக்கின்ற இவரது மாண்புதான், எத்துணை உயர்வாக இலங்குகின்றது. -

அண்ணன் போரில் முதல்நாள் இறந்தவனாக, அதனாற் சினங்கொண்டு அவன் தம்பி பிற்றைநாளில் வஞ்சினங்கூறிப் போர்க்கு எழுவதாக இவர் உரைக்கும் 300, 304 ஆவது புறநானூற்றுச் செய்யுட்கள், படை மறவரின் மறமாண்பிற்குத் - தக்க சான்றாக நிலவுவன. -

சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பதிற்றுப்பத்துள் எட்டாம் பத்தாற் பாடி, அவன் புகழை நிலைபெறச் செய்தவரும் இவரே! அதற்கு அவன் கோயிலா ளுடன் புறம் போந்து நின்று கோயிற்கண் உளவெல்லாம் கொள்கவென்று கூறி, ஒன்பது நூறாயிரம் பொன்னையும் அரசு கட்டிலையும் அளிக்க அதனைப் பெறாது, அவனை இரந்து வேண்டி ஆள்க என அமைக்கப்பூண்டசெவ்வியரும் இவர் ஆவர் என்று அறிதல் வேண்டும். பொன் முடியார்

இவர், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் காலத்தவர். மறக்குடி முதியோரின் கூற்றாக இவர் பாடிய,

ஈன்றுபுறந் தருதல் என்தலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே. நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே! என்னும் புறப்பாட்டு (32) தமிழ்நாட்டின் கடமையுணர்வைக் காட்டும் சிறந்த செய்யுள் ஆகும்.