பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

35


பருத்தி வேலிச் சீறுர் மன்னன் உழுத்ததர் உண்ட ஒய்நடைப் புலவி கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்திற் றண்ணடை மன்னர் தாருடைப் புரவி அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளின் இகழ்ந்துநின் றவ்வே.(புறம் 299) என உரைக்கும் இவரது பாடல், தறுகண்மையுடன் சேரப் பெரும்படையை ஊடுருவிச் சென்ற அதிகமானின் குதிரை மறத்தைப் போற்றுவதாக இருக்கலாம் போலும் குதிரையின் அழகைக்காட்டிலும் அதன் மறமாண்பே சிறந்தது என்று உரைக்கின்ற இச் செய்யுள், உருவப் பொலிவினும் ஒருவரது செயற்கரிய செய்யும் திறப்பாடே போற்றுதற்குரியதெனக் காட்டுவதாகும்.

இவரது, 'கார்த்தரும் புலனென எனத் தொடங்கும் தகடுர் யாத்திரைப் பாட்டும், கலையெனப் பாய்ந்த மாவும் என்னும் தகடூர் யாத்திரைப் பாட்டும், இவர் தகடுர்ப் பெரும் போர்க் காலத்து அரிசில்கிழாருடன், சேரமானது பாசறைக்கண் இருந்தவர் என்பதனைக் காட்டுவனவாகும். -

ஒளவையார் - -

பாணர் குடியினரான இவர் அதிகமானிடம் பேரன்பு உடையவராக, அவன் அரசவைக்கண் நெடுநாள் வீற்றிருந்து, அவனையும் அவன் மகன் பொகுட்டெழினியையும் பாடியவர். இவராற் பாடப்பெற்ற பிறர், நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாவெண்கோ, பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியோராவர். இதனால், தகடுர் யாத்திரைக் காலத்தே இவர்கள் தமிழகத்தில் வீற்றிருந்த பிற மன்னர்கள் என நாம் அறிகின்றோம். -

அதிகனின் சார்பாகப் பகைமன்னர்பால் பலமுறை இவர் தூதுரைத்துச் சென்ற செய்திகளை, அதிகமான் வரலாற்றிற் கண்டோம். - - -

சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிர்ப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரைக் கண்டு உவந்து பாடிய சிறப்பினர். இவர் (புறம், 367) இந்த ஒருமை என்றும் நிலவியிருந்தால், எவ்வளவு சிறப்புடன் தமிழக வரலாறு