பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

37


6. தகடும் யாத்திரைச் செய்யுட்கள் 1. வெண்மையும் ஒண்மையும் .

'வெண்மை’ எனப்படுவது அறிவு முதிராமையோடு விளங்கும் ஒரு தன்மையாகும். ஒண்மை’ என்பது அறிவு முதிர்ச்சியைக் குறிப்பது. அறிவு முதிராமை, முதிர்ச்சி என்னும் இத் தன்மைகளையொட்டி மக்களை வெண்மையர் எனவும், ஒண்மையர் எனவும் ஆன்றோர் பகுத்து உரைப்பார்கள்.

வெண்மை எனப்படுவது யாதெனின்? "ஒண்மை

உடையம்யாம்' என்னும் செருக்கு. -

என்று கூறுகின்றது திருக்குறள் (844), புல்லறிவு உடைமை என்பது யாதென்றால், யாம் நல்லறிவுடையோம் எனத் தம்மைத்தாமே நன்கு மதிக்கும் மயக்கம் என்பது இதன் பொருள்.

இதேபோல, ஒரு நூலைச் செய்யும் சான்றோர்க்கு, அதனைத் தாம் வியத்தற்குரிய சிறப்பினதாகச் செய்தோம் என்னும் செருக்கு ஒரு போதும் ஏற்படுவதில்லை. ஆனால், புல்லறிவினர்க்கோ இந்த மயக்கமே மிகுதியாக இருக்கும்.

“தாம் செய்து முடித்த ஒன்று வியந்து பாராட்டுதற்குரிய ஒன்று அல்லவென்றாலும், அறியாமை உடையவர்கள், தம்மைத் தாமே வியந்துகொள்வது போல, தம் செயலின் முயற்சிகளை எல்லாம் வியந்து பேசிக்கொண்டு இனிமை அடைவார்கள்”

ஆனால், அறிவு முதிராமை எனப்படும் வெண்மை யினின்றும் முற்றவும் தீர்ந்தவரான மெய்யறிவினரோ, இங்ங்னம் தம்மை என்றும் வியந்து உரைப்பதிலர் பிறர் செயற்கண் வியத்தற்குரியன. காணும்போதுதான், அதனை வியத்தற் குரிதாகக் கூறி வியந்து பாராட்டுவார்கள். -

ஆகவே, தம் செய்த செய்யுட்களையும், சான்றோர் ஏற்றுத் தம்மைப் பாராட்டுதல் வேண்டும் என விரும்புகின்றார் ஆசிரியர். இந்த முறையிலே அறிஞருலகினை வேண்டுபவராக, அவையடக்கம் உரைக்கின்றார்.