பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

39


தொடங்கினான். அப்போது, அவன் அருகிருந்த அரிசில்கிழார்,

அவர்களுள் எளிமைத் தோற்றத்துடன் விளங்கிய அந்தணாளரின் உண்மையான செவ்வியை உணர்ந்தவராக, முதற்கண் அவரைச் சென்று சிறப்பிக்குமாறு பெருஞ்சேரலிடம் கூறுகின்றனர். . - . .

"கிழிந்து நைந்து போயின. பழங் கந்தையினைத்தான் உடுத்திருக்கின்றனர். மிகவும் இழிந்த தன்மையினை உடையவரைப் போலப் பிச்சையேற்று உண்டும் திரிகின்றனர்.”

"ஆனால். இவர் தம்முடைய அறிவின் பெருக்கத்தால் நூற்றிதழ் தாமரையைப் போன்ற சிறப்பினை உடையவராவர்”

“தாம் உண்பதாயின் முதற்கண் அவ்வுணவின் ஒரு பகுதியைச் செந்தீயின்கண் அவியாகப் பெய்து, அதன் பின்னரே உண்கின்ற தன்மையர் இவர்”

"தீயவைகளான இச்சைகளை எல்லாம் அவற்றைச் செலுத்தும் முறைமையறிந்து, செலுத்தியவராக அவற்றை முற்றவும் நீக்கிவிட்ட தோற்றத்தினையும் கொண்டிருப்பவர்.”

“ஒளி சிதறும் பூவினையுடைய முருக்கமரத்தினது கொம்பினைத் தோலினை உரித்து நீக்கிவிட்டு, அதனைத் தம்முடைய கைக்கோலாகக் கொண்டிருப்பவர் இவர்.

'துவர் நிறம் மிகுந்த ஆடையினை உடையவர்; பாடினராயின் அரிதான மறையினையே பாடுகின்ற தன்மையர்"

"நெடிது நிலைபெறுதலற்ற தம் உருவத்தையும் தமக்குத் தாமே உரிமையுடையதாகக் கொண்டிருப்பவர் இவர்” ! “இத்தகைய தன்மையராகிய இருப்பிறப்பாளரான இச் சான்றோர்க்கே, முதற்கண் சிறப்புச் செய்தற்குப் பிறரினின்றும் நீங்கிச் சென்று முற்படுவாயாக'

கிழிந்த சிதாஅர் உடுத்தும் இழிந்தார்போல் ஏற்றிரந்து உண்டும்; பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை யன்ன சிறப்பினர்; தாமுண்ணின் தீயூட்டி யுண்ணும் படிவத்தர், தீயவை ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம்; - - அவிர்முருக்கந் தோலுரித்த கோலர்; துவர்மன்னும் ஆடையர், பாடின் அருமறையர், நீடின் உருவந் தமக்குத்தா மாய இருபிறப் பாளர்க்கு ஒருஉகமா தீதே (புறத்/9)